Banner Wishes

செய்திகள்

Monday, December 31, 2012

பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா : சிஸ்டர் மேரி

பெங்களூரு புறநகர் ரயில் நிலையம்,
நிலையத்தின் படிக்கட்டை ஒட்டியு நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன் அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள் "உச்' கொட்டி பரிதாபட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.
இந்த நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி ஒருவர்,

19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள் : சகாயம் I.A.S. @ Dinamalar

""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.