Banner Wishes

செய்திகள்

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Saturday, May 18, 2013

மீண்டும் ஒரு காதல் சின்னம்

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.

Wednesday, May 8, 2013

+2 தேர்வு முடிவுகள் - இணையதளங்கள், எஸ்.எம்.எஸ் விபரங்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,  காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதனை ஒட்டி  தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் அறிவித்தார். கலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடையில்லாமல் மின்சாரம் விநியோகம் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணைய தளங்களில் முடிவை காண மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண்களுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் பின்வருமாறு:
அரசு இணையதளங்கள்:
பிற இணையதளங்கள்:
மேலும்,  பிளஸ் 2 தேர்வு முடிவை எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறிய 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு "TNBOARD <REGISTRATION NO><DOB>" என்ற வடிவத்தில் குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில் தனது தேர்வு முடிவை அறிய TNBOARD125678,25/10/1995 என எஸ்.எம்.எஸ். செய்யவேண்டும். இந்த சேவை காலை 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே முன்கூட்டியே எஸ்.எம்.எஸ்.செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையம்('நிக்'), மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: