இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response Team India (CERT-In) என்ற அமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி,அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய ட்ரோஜன் வகையை சார்ந்த Trojan win32 / Beebone (பீ போன்) வைரஸானது மிக வேகமாக இந்தியாவில் பரவிவருகிறது. இந்த வைரஸ் பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் ஊடுருவ வழிவகுக்கும் தன்மை கொண்டது.
CERT-In அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் (Auto Run) வசதி மற்றும் தேவையில்லாத அப்டேட்களை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.