Banner Wishes

செய்திகள்

Monday, July 29, 2013

உஷார்!!! உஷார்!!! இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்

இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response Team India (CERT-In) என்ற அமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி,அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய ட்ரோஜன் வகையை  சார்ந்த Trojan win32 / Beebone (பீ போன்) வைரஸானது மிக வேகமாக இந்தியாவில் பரவிவருகிறது. இந்த  வைரஸ் பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் ஊடுருவ வழிவகுக்கும் தன்மை கொண்டது. 

CERT-In அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் (Auto Run)  வசதி மற்றும் தேவையில்லாத அப்டேட்களை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். 

விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மிக வலுவான பாஸ்வேர்ட் (Password) மற்றும் யூசர் நேம்களைப் (User Name) பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளனர். 

மேலும் இந்த பீ போன் வைரஸானது பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. என CERT-In தெரிவித்துள்ளது.
  • Trojan.Win32.Jorik.Fareit.qru (Kaspersky),
  • Trojan.Win32.SelfDel.aqhh (Kaspersky), 
  • Trojan.Win32.Jorik.Fareit.qsl (Kaspersky), 
  • Worm.Win32.Vobfus.dxpf (Kaspersky),
  • W32/Autorun.worm.aaeh!gen (McAfee), 
  • Trojan-FBZZ! 41E0B7088DD9 (McAfee), 
  • Beebone-FMQ! 039FA2520D97 (McAfee), 
  • Downloader.a!bs3 (McAfee),
  • W32/VobFus-BX (Sophos), 
  • Trojan horse (Symantec), 
  • W32.Changeup! gen40 (Symantec)
  • Win32/TrojanDownloader.VB.PSN trojan (ESET)
மேலே, வைரஸின் பெயர்களைக் கண்டறிந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த பெயர்களில் பைல்கள் தென்பட்டால் மிகவும் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மற்றும் நம்பகத்தன்மையற்ற இணையதளங்களை கவனமாக கையாளவேண்டும். Anti-virus & Anti -Spyware Signatures ஐ இன்றைய தேதிக்கு அப்டேட் செய்து கொள்வது நல்லது!

மைக்ரோசாப்ட் நிறுவனமானது, இந்த வைரசை நீக்குவதற்கு சில அப்ப்ளிக்கேசன்களை தந்ந்துள்ளது.

1 comment: