Banner Wishes

செய்திகள்

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, September 18, 2013

தமிழைத் தாங்கி வந்த ஐபோனின் புதிய வரவுகள் 5S மற்றும் 5C

பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. 

போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

Monday, September 2, 2013

யு.எஸ்.பி (USB)-ஐ உங்கள் கணினியின் சாவியாக பயன்படுத்த வேண்டுமா?

உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். 

இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது. இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.

Monday, July 29, 2013

உஷார்!!! உஷார்!!! இந்தியாவில் பரவும் பீ போன் வைரஸ்

இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response Team India (CERT-In) என்ற அமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி,அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய ட்ரோஜன் வகையை  சார்ந்த Trojan win32 / Beebone (பீ போன்) வைரஸானது மிக வேகமாக இந்தியாவில் பரவிவருகிறது. இந்த  வைரஸ் பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் ஊடுருவ வழிவகுக்கும் தன்மை கொண்டது. 

CERT-In அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் (Auto Run)  வசதி மற்றும் தேவையில்லாத அப்டேட்களை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். 

Sunday, June 23, 2013

சுட்டிகளுக்கென பாதுகாப்பான தனி தேடு இயந்திரங்கள்

இணைய உலகில் கூகுளைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்படும் கூகுள் தளத்தை (Google) நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள். இணையத்தில் தகவல்களைத் தேட நீங்களே பல முறை இந்தத் தேடு இயந்திரத்தைப் (சர்ச் இஞ்சின்) பயன்படுத்தி இருப்பீர்கள்.

கூகுள் போலவே வேறு பல தேடு இயந்திரங்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால், சிறுவர்களுக்கு என்றே தனியாகத் தேடு இயந்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?  சுட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்புத் தேடு இயந்திரங்களும் இருக்கின்றன.

இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எளிமையானவை. சுட்டிகளுக்கு ஏற்ற வகையில் வண்ணமயமானவை கூட.

Saturday, June 8, 2013

கூகுள் மற்றும் பேஸ்புக்கை உளவு பார்க்கும் அமெரிக்கா...

கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க முடிவுக்கு கூகுள், மற்றும் பேஸ்புக் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்திட கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள இன்டர்நெட் உபயோகம் அழிவு செயலுக்கும் பயன்படும் விதமாக சில விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன என அமெரிக்கா கவலையுற்றுள்ளது. 

Saturday, April 13, 2013

நம்முடனே உடன்கட்டை ஏறும் நம் இணைய தகவல்கள் - கூகுள் புதிய வசதி

இன்றைய நவீன வலையுலகத்தில், நம்மில் பலரும் நமது தனிப்பட்ட மற்றும் சுயவிபரங்கள்  கோப்புகள்,புகைப்படங்களை பகிர்ந்து / சேமித்து வைத்துள்ளோம். ஒரு வேளை நாம் "இவ்வுலகிலே"  இல்லாத போது அல்லது நாம் இணைய உலகை விட்டு நிரந்தரமாக வெளிவரும் போது, இணையத்தில் உள்ள நம் மெயில் அக்கவுண்ட், சமூக வலைத்தளப் பக்கம் மற்றும் அவற்றில் உள்ள டேட்டாக்கள் என்ன ஆகும்..? என்று இணையவாசிகள் பலரும் யோசிப்பது உண்டு. 

Sunday, March 24, 2013

சிறந்த 100 விசை பலகை விசைகள்(Shortcut Keys)



100 Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C - (Copy)
2. CTRL+X - (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)

Tuesday, February 5, 2013

பயர்பாக்ஸ் மற்றும் குரோம் - ல் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவது எப்படி?

புக் மார்க் (Bookmark)  :-  இணைய உலாவிகளில் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் முன்னிலையில் உள்ளன. இவற்றில் அதிகம் பயன்பத்தபடும் வசதிகளில் ஒன்று தான் இந்த புக் மார்க் (Bookmark). இதன் மூலம் நாம் அடிக்கடி உலவும், நமக்கு பிடித்த, இணையதள முகவரிகளை குறித்து / சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு சேமித்த புக் மார்க்குகளை, தவறுதள்ளாக அழித்துவிட்டால், என்ன செய்வது?

கவலைவேண்டாம் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவதற்க்கான வசதியை கொண்டுள்ளன. பயர்பாக்சை பொறுத்தமட்டில் இச்செயல் மிகவும் சுலபம். ஆனால் குரோமில் சிறிது கடினம். அதற்க்கான வழிமுறைகளை கீழ் காண்போம்.

Monday, January 21, 2013

டிரிங்..டிரிங் : 181 - பெண்களுக்கான ஹெல்ப்லைன்

தலைநகர் டில்லியில் மருத்துவ மாணவியின்  பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கி உள்ளனர். அதேவேளையில்,நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு பல்வேறு காரணிகளை செய்து வருகிறது. அவற்றுள்  மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவ, ஹெல்ப்லைன் எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆபத்தான காலங்களில் "181" என்ற எண்ணை பெண்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல்  இச்செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபல் அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத உள்ளார். 

Sunday, January 20, 2013

மில்கிவே : 15 வயது மாணவன் வடிவமைத்த "விளையாட்டு பயன்பாடு"




மில்கிவே : ஆண்ட்ராய்ட்  மொபைலுக்கான ஒரு "விளையாட்டு பயன்பாடு" (Game App).  இதன் சிறப்பம்சம் என்னவென்றால்இதனை வடிவமைத்த வல்லுநர் தான்ஆம் தலைநகர் டெல்லியை சேர்ந்த, 15 வயதே நிரம்பியஹாசன் கமல் (Hasan Kamal) என்ற மாணவன் தான் இந்தபயன்பாட்டை வடிவமைத்தவர்.

Saturday, January 12, 2013

சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து சாதனை!


சென்னை ஐ.ஐ.டி சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து  சாதனை படைத்து உள்ளனர். 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன்  செயற்கை ரத்தம் தயாரிப்பு  குறித்த ஆய்வுகளை சென்னை ஐ..ஐ.டி.க்கு செய்து வந்தது. இதற்கென ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது.  அக்குழுவிற்கு டாக்டர்  சோமா குஹ்தாகுர்தா (Dr.Soma Guhathakurta) தலைமை வகித்தார். டாக்டர் சோமா மற்றும் அவர் குழுவினரின் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக,  ஸ்டெம் செல்களில் இருந்து ரத்தச் சிவப்பு அணுக்களைப் பிரித்து  எடுத்து அதன் மூலமாக செயற்கை முறையில் ரத்தம் தயாரித்தனர்.

Thursday, January 10, 2013

"லண்டன் டியூப்"- இன்று(ஜன.10) வயது 150..!

உலகில் முதன் முதலாக அமைக்கப்பட்ட "லண்டன் டியூப்" என்றழைக்கப்படும் சுரங்க பாதைக்கு, இன்று வயது 150!
உலகிலேயே முதன்முறையாக லண்டனில் தான் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது.

கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜன 10ம் திகதி தொடங்கப்பட்ட ரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது.




Monday, January 7, 2013

வி.எல்.சி மீடியா பிளேயர் மூலம் வீடியோவை பிரித்தெடுப்பது எப்படி?


விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.
இதற்கு கணிணியில் புதிய பதிப்பான VLC 2.0 நிறுவியிருக்க வேண்டும். இல்லாதவர்கள் கீழுள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். .Download Vlc Here.

பெண்களுக்கான "ரோபோ" செருப்பு - ஒரு மிதிக்கு 'எலக்ட்ரிக் ஷாக்', 2 மிதிக்கு 'எஸ்.எம்.எஸ்'


தானே: மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண்களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், வன்முறையாளர்களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. 

Sunday, January 6, 2013

Fight Back : இந்தியாவின் முதல் பெண்கள் பாதுகாப்புகான மொபைல் பயன்பாட்டு மென்பொருள்

(To read this article in English...)

 என்  உடன்பிறவா சகோதரிகளே..! "மனதை ரணமாக்கிய" செயல்பாடுகளால் தனியே செல்ல பயப்படுகிறாயா? அல்லது வீட்டின் உள்ளே அடைந்து இருப்பதே பாதுகாப்பு என நினைககிறாயா? எத்தனை நாட்களுக்கு? இது போராட வேண்டிய நேரம்ஒரு பதிவர் என்ற முறையில், உன் பாதுகாப்புக்கு உதவும் ஒரு மொபைல் பயன்பாட்டு மென்பொருளை (mobile app) பற்றி பதிவிடுகிறேன்.
இதன் வழி  நீ தன்நம்பிக்கையுடன் சாலையில் நடக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

FightBack: பெண்கள் பாதுகாப்பு மென்பொருள், இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்இது உங்கள் கைபேசியில் இருந்து SOS எச்சரிக்கைகள் அனுப்புகிறது. நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தெரிவிக்க ஜிபிஎஸ்(GPS), எஸ்எம்எஸ்(SMS), வரைபடங்கள்(Map), ஜிபிஆர்எஸ்(GPRS), மின்னஞ்சல்(EMail) மற்றும் உங்கள் Facebook கணக்கை பயன்படுத்துகிறது

Wednesday, January 2, 2013

தமிழ் இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும்...

தமிழ் தழுவாத தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கக் கூடாது என்ற அடங்காத ஆசையுடன், பயனுள்ள மென்பொருள் தொகுப்புகளைப் பலர் உருவாக்கித் தந்து வருகின்றனர். 

 அவற்றுள் ஆப்பிள் நிறுவன மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், தமிழ் பயன்படுத்த முத்து நெடுமாறன் வழங்கிய, “முரசு செல்லினம்” என்னும் மென் பொருள் குறித்தே இந்த பதிவு. 

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) மற்றும்  ஐடியூன்  ஸ்டோரிலும் (itune store) இந்த மென்பொருளை, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Tuesday, January 1, 2013

2012 - ம் ஆண்டிற்க்கான பயர் பாக்ஸ் உலாவி - ன் சிறந்த ஆடான் / எக்ஸ்டெண்சன்ஸ் (add-on / Extensions)

இணையத்தில் ஒவ்வொரு உலாவியும் தனக்கென்று ஆடான் / எக்ஸ்டெண்சன்ஸ் (add-on / Extensions) ஐ கொண்டிருக்கின்றன.! இந்த add-on கள்  பிரவுசர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தருகிறது. மொஸில்லா நிறுவனமானது எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அறிமுகப்படுத்தியதுடன், மற்றவர்களும், அதே போல தயாரித்து வழங்க அனுமதித்துள்ளது! கடந்த 2012 - ம் ஆண்டில் மக்களின்  வரவேற்பை பெற்ற 12  எக்ஸ்டன்ஷன் (add-on) (ஒவ்வொரு மாதமும் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்த ஒன்று ) - களை  கீழ் காண்போம்.

டிசம்பர் மாதம் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்ததாக பரிந்துரைப்பது,
collusion இது பாதுகாப்பு தரும் புரோகிராம் ஆகும். எந்த இணைய தளங்கள், நாம் இணையத்தில் உலா வரும் வழிகளைக் கண்காணிக்கின்றன என்று நமக்குத் தெரிவிக்கும் பணியினை இது மேற்கொள்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்கள், எவ்வாறு ட்ரேக்கர்களுக்கும் (trackers) நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/collusion/?src=externaldenblog