Banner Wishes

செய்திகள்

Wednesday, January 9, 2013

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே கட்டணம் 20% உயர்வு.

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேம்படுத்துவதற்காக , 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே கட்டணம் 20% உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம்  வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய ரயில்வேத்துறை மத்தியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகள் வசம் இருந்து வந்தது. இதனால் ரயில்வே கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை, ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி உயர்த்தினார். 
இதனால் அவரது கட்சி தலைவர் மம்தா அதிருப்தியடைந்தார். ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும என்று விடாப்பிடியாக இருந்தார். இதனால் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் திரிணமுல் கட்சியை சேர்ந்தவரே ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.இதன் பின்னர் ரயில்வே அமைச்சர் பதவி காங்கிரஸ் வசம் வந்தது. இதனையடுத்து ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும் என அமைச்சர்கள் கூறி வந்தனர். எப்போது உயர்த்தப்படும் என கூறப்படவில்லை. ரயில்வே துறை பயணிகள் கட்டண பிரிவில் ரூ.24,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருவதாக மத்திய அரசு கூறி வந்தது.

இந்நிலையில் ரயில்வே கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பத்திரிகையாளர்களை சந்தித்து ரயில்வே கட்டணங்கள் குறித்து அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரயில் கட்டணங்கள் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போது ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கருத்தில் கொண்டும், 6வது சம்பள கமிஷன் காரணமாகவும் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது. ரயில் கட்டண உயர்வு மூலம் 12 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். 

 புதிய கட்டண விவரம் பின்வருமாறு :-

  • சாதாரண 2ம் வகுப்பு புறநகர் பகுதி ரயில்வே கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது.
  •  2ம் வகுப்பு சாதாரண புறநகர் அல்லாத பகுதிகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு 3 பைசா உயருகிறது.
  • விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான ரயில்வே கட்டணம் கிலோ மீட்டருக்கு 3 பைசா உயர்த்தப்படும்.
  • ஏசி வசதியுடன் கூடிய 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்த்தப்படுகிறது.
  • ஏசி வசதியுடன் கூடிய இருக்கை பெட்டிகளுக்கான ரயில்வே கட்டணம் கி.மீட்டருக்கு 10 பைசா உயர்த்தப்படும்.

3 comments:

  1. ஹாய் வணக்கம் , வாழ்த்துகள் எழுத்து ஃபாண்டை மட்டும் ஸ்மால் டூ நார்மல் சேஞ்ச் பண்ணவும் ;-))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. தங்கள் வலைப்பூவில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி ரியாஸ் அஹமது.

    ReplyDelete