Banner Wishes

செய்திகள்

Saturday, January 5, 2013

நண்பர்கள் கவனத்திற்கு - விமர்சனம்


தமிழ் சினிமாவில் நட்பு  பின்னணியில் வெளிவந்திருக்கும் பத்தோட ஒன்று பதினொன்னு தான் இந்த "நண்பர்களின் கவனத்திற்கு". "சுப்ரமணியபுரம்", "நாடோடிகள்", "சுந்தரபாண்டியன்படங்களை போலரொம்ப நல்லவேன்னு நினைச்ச ஒரு துரோகி நண்பனால் பாதிக்கப்படும்  ஹீரோவின் கதையே இதும்ஆனால் அந்த படங்களை விட சுமாரே..! படத்தின் ஓபனிங்லே,
 காணமல்போன தன் அப்பா வர்ஷனை(இன்னொரு ஹீரோ) தேடி அலைகிறார்  அவரது  மகன்,  வர்ஷனோ அவர் சொந்த ஊருக்கு போகும் ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்துதன் பழைய நினைவுகளை அசைபோட்டு கொண்டிருக்கிறார்இப்போ இங்க கட் பண்ணி ஓபன் பண்ண ப்ளாஷ்பேக்இளவயது ஹீரோ சஞ்சீவ்இன்னொரு ஹீரோ வர்ஷன் மற்றும் ஹீரோயின் வெண்ணிலா +2 படிக்கும் மாணவர்கள்வர்ஷனுக்கு வெண்ணிலாவ  பார்த்தவுடனேயே காதல்உடனே லவ் லெட்டர் எழுதி வெண்ணிலா புத்தகத்துக்குள்ள வைகிறார்அவன் கெட்ட நேரம்அந்த லெட்டரை வர்ஷனின் அப்பாவும் கம் ஸ்கூல் ஹெட்மாஸ்டருமான ராஜ்கபூர் கையில் கிடைக்க"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்ரேஞ்சுக்கு யார்டா  எழுதுனது சவுண்ட் விடறார்உடனே வர்ஷனை காப்பாத்த சஞ்சீவ் "நானே அது நானேனுபழியை ஏத்துக்குறனாலஹீரோவ டிஸ்மிஸ் பண்றாங்க

இதுக்கு பரிகாரமா வர்ஷன் தன் வீட்டிலிருந்து பணம்மற்றும் டிவிஎஸ் 50 கொண்டு வந்து சஞ்சீவ்கிட்ட கொடுக்குறாருஇந்த கேப்ல ஹீரோயின்  தான் சஞ்சீவை தான் லவ் பண்றதா சொல்லஹீரோவும்ஹீரோயினும் வர்ஷன் வண்டில ஊர் சுத்துறாங்கஇதை பார்த்த  ராஜ்கபூர்வர்ஷனிடம் "என்ன  நடக்குது இங்கனு  கேட்கஅந்தர் பல்டி அடிக்கிறார் வர்ஷன்எப்டினா சஞ்சீவ் தான் பணம்வண்டியை தன்னை மிரட்டி எடுத்துக்கிட்டதாக சொல்ல ராஜ்கபூர்சஞ்சீவின் அப்பா தலைவாசல் விஜய்ட்ட எகுறார்இதனால் தலைவாசல் விஜய் சஞ்சீவை சாத்து சாத்துன்னு சாத்திறார் . அதே சமயம்  வெண்ணிலாவும் சஞ்சீவை பிராட்னு சொல்லி லவ்க்கு குட் பாய் சொல்லசஞ்சீவ் சோகமா ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சுல போய் படுத்துக்க.. அங்கே வேலை பார்க்கும் ஒருவர்இவரை வெளியூர்ல இருக்கும்  ஒரு ரைஸ் மில்லுல வேலை வாங்கிதறாருஹீரோவும் அங்க போய் நல்ல படிய வேல செஞ்சு வீட்டுக்கு பணம் அனுப்பி நல்ல பையன்னு பேரு எடுக்கிறாருஹீரோவோட தங்கச்சி மூலமா ஹீரோ நலவருனு தெரிஞ்சு போயி லவ் ரெனிவல் ஆவுது

சில வருடங்களுக்கு பிறகுஹீரோ ரீட்டனிங் டு ஹோம்வெண்ணிலாவோட அப்பாவுக்கு தனக்கு வரும் மாப்பிள்ளை நல்ல படிச்ச பையனா இருக்கணும்னுவர்ஷனை சம்பந்தம் பேசி முடிக்கிறார்ஏன்னா வர்ஷன் இப்போ எஞ்சினீயர்வர்ஷனிடம் வெண்ணிலாவோ  தான் சஞ்சீவை லவ் பண்றதா சொல்றார்வர்ஷன் அப்போ நானே உங்களை சேர்த்து வைக்குறேன்.. நீங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்குங்கனு  என்று ஐடியா தறார்அந்த ஐடியா படி காலை ரயில்வே ஸ்டேஷனில் பெட்டியுடன் சஞ்சீவ் காத்திருக்க.. ஆனால் வர்ஷனோ அடியாள்களை ஏவி சஞ்சீவை போட்டு தள்ளிட்டுவெண்ணிலாவை கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்துக்கிறார்குழந்தை பொறந்த நாள் சஞ்சீவ் செத்துப் போயிட்டான்ற மேட்டரே வெண்ணிலாவுக்குத் தெரியவரதற்க்கொலை செய்து கொள்கிறார்இப்போ கைக்குழந்தையோட வர்ஷன் தனியா நிக்குறார்ப்ளாஷ்பேக் முடிஞ்சிஇன்னைக்கு அதே நாள்.. அதே நேரம்.. அதே பெஞ்சுல வர்ஷன்தான் செஞ்ச துரோகத்தை நினைச்சு விஷத்தைக் குடிச்சு செத்துப் போயிடறார்தி எண்டு..!  

ஹீரோவா சஞ்சீவ் இவர் பார்ப்பதற்கு அப்பிராணி போல் இருப்பதால் கேரக்டருக்கு செட் ஆகியிருக்கிறார்கொஞ்சம் நடிக்கிறாருவர்ஷனால் இவருக்கு ஏற்படும் முடிவால் பரிதாபபட வைக்கிறார்.ஹீரோவை விட வர்ஷனுக்கே அழுத்தமான கேரக்டர்ஹீரோயினா மணிஷீஜித் பார்க்க சிறு பிள்ளை போல் இருப்பதால் பள்ளி பருவ கேரக்டருக்கு செட் ஆகிறார், ஆனால இளம் பருவ மற்றும் மணமான கேரக்டருக்கு பொருந்தவே இல்லை. மற்ற படி ஓகே

ஹீரோக்களின் அப்பாக்களாக வரும்  தலைவாசல் விஜய்  மற்றும்  ராஜ்கபூர், தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயகுமார் , பாம்புக்கு பால் வார்த்த மாதிரி, துரோகி நண்பன நம்புனா என்னாகுமுனு  சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.  முதல் படம் என்ற வகையில் ஓகே, ஆனால் அடுத்தடுத்த படங்கள் எடுக்க இது பத்தாது, கவனம் தேவை

No comments:

Post a Comment