மில்கிவே : ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு "விளையாட்டு பயன்பாடு" (Game App). இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை வடிவமைத்த வல்லுநர் தான். ஆம் தலைநகர் டெல்லியை சேர்ந்த, 15 வயதே நிரம்பிய, ஹாசன் கமல் (Hasan Kamal) என்ற மாணவன் தான் இந்தபயன்பாட்டை வடிவமைத்தவர்.
பயன்பாட்டை பற்றி:
பறக்கும் சக்தி கொண்ட பசு (Super Cow), பறந்து கொண்டே வழியில் தென்படும் பால் பைகளை சேகரிக்க வேண்டும். ஒவ்வொன்றிக்கும் 10 புள்ளிகள். அவ்வப்போது 50 புள்ளிகள் மதிப்புடைய "டானிக் மில்க்" பால் பைகளும் எதிர்படும். இவற்றை சேகரிக்க விடாமல் பசுவை கொல்ல "தடை கற்கள்" உண்டு. தடையிலிருந்து தப்பித்து புள்ளிகள் சேர்க்க வேண்டும். 3 வாய்ப்புகள் தரப்படும்.
இந்த பயன்பாட்டின் மற்றொரு சிறப்பு, இதன் பின்னணி இசை. இசையமைத்தது 15 வயதான பிரபாவ் (Prabhav Khandelwal) என்ற மாணவன்.
இந்த பயன்பாடு தற்போது கூகிள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
No comments:
Post a Comment