Banner Wishes

செய்திகள்

Saturday, January 12, 2013

சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து சாதனை!


சென்னை ஐ.ஐ.டி சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து  சாதனை படைத்து உள்ளனர். 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன்  செயற்கை ரத்தம் தயாரிப்பு  குறித்த ஆய்வுகளை சென்னை ஐ..ஐ.டி.க்கு செய்து வந்தது. இதற்கென ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது.  அக்குழுவிற்கு டாக்டர்  சோமா குஹ்தாகுர்தா (Dr.Soma Guhathakurta) தலைமை வகித்தார். டாக்டர் சோமா மற்றும் அவர் குழுவினரின் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக,  ஸ்டெம் செல்களில் இருந்து ரத்தச் சிவப்பு அணுக்களைப் பிரித்து  எடுத்து அதன் மூலமாக செயற்கை முறையில் ரத்தம் தயாரித்தனர்.

இந்த செயற்கை  ரத்தத்தை , ரத்த சோகையால் பாதிக்கபட்ட ஓர்  எலியின் உடலில் செலுத்தி சோதனை செய்தனர். ரத்த சோகையால் சுறுசுறுப்பு குறைந்து மந்தமாக இருந்த அந்த எலி, செயற்கை ரத்தம்  செலுத்தப்பட்ட சில நாட்களிலேயே துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது. 
இந்த செயற்கை ரத்தம் தற்போது ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக  மட்டுமே இருக்கிறது. இதனை ரத்தச் சிவப்பு அணுக்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக  மாற்றி மனித உடலிலும் செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என்று,  ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். 

இப்போது, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சில நோயாளிகளுக்கு  செயற்கை ரத்தத்தை செலுத்தி ஆராய்ச்சியைத் செய்து கொண்டிருக்கின்றனர்.  நம் நாட்டில் இன்னும் 3 ஆண்டுகளில் மனிதனுக்கு செயற்கை ரத்தம் செலுத்தி  பரிசோதனை செய்யப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர்.

No comments:

Post a Comment