குற்றம் புரிந்தவர்கள், தன் குற்றத்தை உணர்ந்து, மனம் திருந்தி நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கான இடமே சிறை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சிறைகள் ஒரு மனிதனை அப்படி தான் மாற்றுகிறதா? என்றால் ஆம்! இல்லை! என இரு விவாத பதிலே கிடைக்கும்.
ஆனால், குற்றவாளியான ஒருவர் தனது சிறைவாச காலத்தில் சாதனை மனிதராகியுள்ளார். யார் அவர் ? எப்படி?
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு படேல்(57) . மருத்துவரான பானு படேல், கடந்த 2004-ம் ஆண்டு அன்னியச் செலாவணி (Foreign Exchange Regulation Act ) வழக்கில் கைதாகி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் 2005 முதல் 2011 வரை சிறையில் இருந்தார். இந்த 6 வருட கால சிறை வாசத்தில் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்வியைத் தொடர்ந்தவர், எம்.எஸ்சி (M.Sc.,) எம்.காம் (M.Com), பி.காம் (B.Com), முதுகலைப் பட்டயப் படிப்புகள் (PG Diploma) என 31 பட்டங்களை வாங்கி குவித்தார்.

இதன் வாயிலாக , "சிறையில் இருந்தபடியே மிகுதியான கல்வியைக் கற்றவர்" என்ற சாதனையை அவர் செய்துள்ளார். 'யுனிக் வேர்ல்ட் ரெக்கார்டு' (Unique World Records) மற்றும் 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு' (Asia Book of Records) ஆகியவற்றில் இருந்து சாதனைச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார். மேலும் 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு' (Limca Book of Records) அதன் 2013-ம் ஆண்டிற்கான பதிப்பில் இவரது சாதனையை உறுதி செய்துள்ளது.
தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள 26 சிறைகளில், செயல்பட்டு வரும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தவெளிப் பல்கலைக்கழத்தின் கல்வி மையங்கள் மூலம் கல்வி அளிக்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் படேல், விரைவில் அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவுள்ளார்.

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
ReplyDeletehttp://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html