Banner Wishes

செய்திகள்

Sunday, January 6, 2013

மறதி நோய் வராமல் தடுக்க...

வயதானவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம், மூளை சுருங்குவதைத் தடுத்து, டிமெண்சியா எனப்படும் ஞாபகமறதி நோய் வராமல் பார்த்துக்கொள்ள  முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு  முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:


அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், மூளை சுருங்குவதை தடுக்க முடியும். இதன் மூலம் மூப்புடன்  தொடர்புடைய டிமெண்சியா எனப்படும் ஞாபகமறதி நோயை தடுக்கமுடியும்.

இவர்கள் கடிமான உடற்பயிற்சியை செய்யவேண்டியதில்லை. தினந்தோரும் நடைபயிற்சி செய்தாலே உரிய பலன் ஏற்படும். 

அதேசமயம், மூளைக்கு  வேலை தரும் சுருக்கெழுத்து, சுடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை. மூப்பு உருவாகும்போது,  பொதுவாக மனிதர்களின் மூளை சுருங்குவது இயல்பு. 

இப்படி மூளை சுருங்கும்போது, மனிதர்களின் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும். மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம்  கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக  அறியப்படுகிறது. இதில் வயதாகும்போது, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும்.

தினசரி நடைப்பயிற்சி செய்வது இந்த இரண்டையும் தடுக்கிறது என்பதுதான் எடின்பர்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. உடற்பயிற்சியினால் ரத்த  சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.  எனவே, வயதான காலத்தில் மூளைத்திறனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.

No comments:

Post a Comment