Banner Wishes

செய்திகள்

Monday, January 7, 2013

கழுத்துவலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்


கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன  வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது,  எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து  பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.
கழுத்துவலி வராமல் இருக்க உயரமான தலையணை, சமனில்லா படுக்கையை உபயோகப்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோவில்  நீண்டதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். அதிக எடை தூக்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். இது  கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும். 

அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். எங்கள் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் கழுத்து வலியை முற்றிலும்  குணப்படுத்த முடியும். நாங்கள் இருவகையான சிகிச்சை முறைகளை எங்களது பிரபா ஆயுர்வேத மருத்துவமனையில் அளிக்கிறோம். நோய்  தொடக்கத்திலேயே வருபவர்களுக்கு வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக வெளிப்பூச்சு மருந்துகள் தருகிறோம். 3 மாதம் சிகிச்சை  செய்ய வேண்டும்.


(பதிவு பிடித்திருந்தால் "கமெண்ட்" பண்ணுங்க.)

நன்றி  - தினகரன் (to read original post)

2 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி தோழரே..!

      Delete