தலைநகர் டில்லியில் மருத்துவ மாணவியின் பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கி உள்ளனர். அதேவேளையில்,நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு பல்வேறு காரணிகளை செய்து வருகிறது. அவற்றுள் மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவ, ஹெல்ப்லைன் எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆபத்தான காலங்களில் "181" என்ற எண்ணை பெண்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் இச்செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபல் அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத உள்ளார்.
Excellent news this is.
ReplyDeleteMust save women going alone at nights.