Banner Wishes

செய்திகள்

Tuesday, February 5, 2013

பயர்பாக்ஸ் மற்றும் குரோம் - ல் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவது எப்படி?

புக் மார்க் (Bookmark)  :-  இணைய உலாவிகளில் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் முன்னிலையில் உள்ளன. இவற்றில் அதிகம் பயன்பத்தபடும் வசதிகளில் ஒன்று தான் இந்த புக் மார்க் (Bookmark). இதன் மூலம் நாம் அடிக்கடி உலவும், நமக்கு பிடித்த, இணையதள முகவரிகளை குறித்து / சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு சேமித்த புக் மார்க்குகளை, தவறுதள்ளாக அழித்துவிட்டால், என்ன செய்வது?

கவலைவேண்டாம் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவதற்க்கான வசதியை கொண்டுள்ளன. பயர்பாக்சை பொறுத்தமட்டில் இச்செயல் மிகவும் சுலபம். ஆனால் குரோமில் சிறிது கடினம். அதற்க்கான வழிமுறைகளை கீழ் காண்போம்.


பயர்பாக்ஸ் (FIREFOX)
=====================
மேற்கூறியது போல் பயர்பாக்ஸ் - ல்  அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவது மிகவும் சுலபம்.

பயர்பாக்ஸ் - ல்  மெனுவில், Bookmark ►► Show All Bookmark - ஐ கிளிக் செய்யவும்
அல்லது Ctrl + Shift + B பொத்தான்களை கீபோர்டில்  அழுத்தவும்.

 கீழே படத்திள்ள திரை வரும், அத்திரையில்

தற்செயலாக அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெற, Oraganize ►► Undo கிளிக் செய்யவும்.


 அல்லது முந்தய தேதி புக் மார்க்கை பெற Import and Backup ►► Restore கிளிக் செய்யவும்.


Restore மெனுவில் தேதி வாரியாக, புக் மார்க்கள் வரிசைபடுத்தப்பட்டிருக்கும். அவற்றுள் உங்களுக்கு தேவையான புக் மார்க்கை தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட அலெர்ட் வரும், அதில்  Ok  - ஐ கிளிக் செய்யவும்.
குரோம் (CHROME)
=================
தற்செயலாக அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெற குரோமில் Undo வசதியில்லை. அதற்கு பதிலாக,பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

Windows Explorer-ஐ  Launch செய்து, அட்ரஸ் பார் (address bar) - ல் கீழ்க்கண்ட வரியை 
பொருத்தவும்.

For XP Users :

C:\Documents and Settings\[Your User Name]\Local Settings\Application Data\Google\Chrome\User Data\Default

For Window 7 Users :

C:\Users\[Your User Name]\AppData\Local\Google\Chrome\User Data\Default

இதன் வழியாக குரோமின் டேட்டாகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள Directory திறக்கப்படும். அந்த Directory-ல் Bookmark, Bookmark.bak என இரண்டு பைல்கள் காணப்படும்.


Bookmark - தற்போது உபயோகத்திலிருக்கும் புக் மார்க்யையும்,
Bookmark.bak - முந்தய உபயோகத்திலிருந்த  புக் மார்க்யையும், கொண்டிருக்கும். 

அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெற,

  • Bookmark பைலை Delete செய்யவும்.
  • Bookmark.bak பைலை Bookmark என்று பெயர் மாற்றவும். (அதாவது .bak என்பதை remove செய்யவும்).



5 comments: