Banner Wishes

செய்திகள்

Friday, February 1, 2013

கடல் - ஓட்டை விழுந்த கப்பல்

"ராவணன்" பட சரிவிற்கு பிறகு, இயக்குனர் மணிரத்னம்  படைப்பில் வெளிவந்திருக்கும், முழுநீள காதல் திரைப்படம் "கடல்".  அடுத்துக்காக ஒரு அலைபாயுதே, மௌனராகம், ரேஞ்சுக்கு எதிர்பார்த்த, ஏமாற்றமே..!



கதை: ஹீரோ தொம்மை (எ) தாமஸ் (கௌதம் கார்த்திக்) சிறு வயதிலேயே, தன் தாயை இழந்து,  சர்ச்சில் வளர்கிறார். அந்த ஊருக்கு பாதிரியாராக வரும் அரவிந்த்சாமி, ஹீரோவை திருத்தி நல்வழிபடுத்துகிறார். அதே ஊரில் இருக்கும் 'தாதா' மேசைகாரர் (அர்ஜுன்), அவரின் சூழ்ச்சியால், அரவிந்த்சாமி ஊர் மக்களால் தாக்கப்பட்டு, சிறை செல்கிறார்.(அர்ஜுன் ஏன் அப்படி செய்றார் என்பதற்கு, அரவிந்த்சாமி மற்றும் அர்ஜுன் இருவருக்குமிடையே ஒரு ப்ளாஷ்பேக் உள்ளது). 

அரவிந்த்சாமி சிறையிலிருக்கும் சமயத்தில், ஹீரோ அர்ஜுனிடம் அடியாளாக சேர்ந்து பெரிய ரவுடி ஆகிறார். இதற்கிடையில் ஹீரோ தாமஸ் மனநிலை பாதிக்கப்பட்ட, அர்ஜுனின்  மகள் பியா (துளசி) - யைப் காதலிக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் அரவிந்த்சாமி, ஹீரோ தாமசை மீண்டும் திருத்த  பார்க்கிறார். துளசி யார்? ஹீரோ திருந்தினாரா? அவர் காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் கதை.

படத்தின் முக்கிய பலம்  ஒளிப்பதிவும், பாடல்களுமே. கடல், மீன் மார்க்கெட்,  சர்ச்   சம்பந்தப் பட்ட காட்சிகளே அதற்கு உதாரணம்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் அனைத்தும் , கதையின் நகர்வுக்கு ஏற்ற பின்னணி இசையும் அருமை, பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் ரசிக்க வைக்கிறது. 

ஹீரோ கௌதம் கார்த்திக், எதார்த்தமாக நடித்து, தன் முதல் பட வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஹீரோயின் துளசி, ராதாவின் சாயல் கார்த்திகாவை விட இவரிடம் அதிகமாகவே தெரிகிறது, குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதுவே சில சமயங்களில் சலிப்பைத்  தருகிறது.


பல வருடங்களுக்கு பிறகு திரையில் அரவிந்த்சாமி, பாதிரியாராக மென்மையாக நடித்துள்ளார். ஊர் மக்களால் தாக்கப்படும்போது பரிதாபத்தை பெறுகிறார்.


இதுவரை நாட்டை காப்பற்றிய 'ஆக்சன் கிங்' அர்ஜுன், இதில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். அதிலும் நான் சாத்தான், சாத்தானின் பிள்ளை என்று அடிக்கடி சொல்வது ரசிக்க வைக்கிறது.

மணிரத்னத்தின்  இயக்கத்தில், படம் துவக்கம் முதல் இடைவேளை வரைக்கும் வேகமாக நகரும் படம் , இடைவேளைக்குப் பிறகு மணிரத்னத்தின்  இயக்கத்தை விட்டு விலகி, ஓட்டை விழுந்த பரிசல் போல தள்ளாடுகிறது.  

படத்திலுள்ள பல கதாபாத்திரங்கள் இருந்தும், எவரும் மனதில் ஒட்டவில்லை. படத்தில் ஆங்காங்கே பேசப்படும் கெட்ட வார்த்தைகளும், படத்தில் காட்டப்படும் பிரசவகாட்சியும் முகம் சுளிக்க வைக்கிறது. பிற்ப்பாதியில் காட்சியின் நீளத்தை கவனத்தில் கொண்டிருக்கலாம்.

இன்றைய புது இயக்குநர்களுக்கு, வழிகாட்டியாய் இருக்கும் மணிரத்னம், 
இந்த "கடலில்"கரை ஏற முடியாமல் தத்தளிக்கிறார். படம் முடிந்து வெளிவரும் ரசிகர்களிடையே, அடுத்தாவது ஒரு மணிரத்னம் படம் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் மட்டுமே உள்ளது. "மணி சார்", WE ARE WAITING...!

டேவிட்  - திரைப்படத்தின் விமர்சனம் படிக்க....

No comments:

Post a Comment