Banner Wishes

செய்திகள்

Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts

Monday, June 17, 2013

விகடனனின் "இன்ஜினீயரிங் கவுன்சிலிங் செல்வோர்க்காண A-z வழிகாட்டி"

பொறியியல் பட்டப்படிபிற்க்கான கலந்தாய்விற்கு செல்லும் மாணவ/மாணவிகளே,  கலந்தாய்வு பற்றிய சந்தேகங்களுக்கு A to Z எளிமையான வழிகாட்டி!

#.
வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 


இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

#. மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, April 10, 2013

திண்டுக்கல், தஞ்சை - நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்வு!!!

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 23, 2013

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 2


முந்தைய பதிவில் குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பதிந்திருந்தோம்.அதன் தொடர்ச்சி....

என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?

சார்ட்டர்டு அக்கௌன்டன்ட் (C.A) இறுதி தேர்வில் தமிழ் மாணவி முதலிடமெடுத்து சாதனை


மும்பையில் வாழும்  தமிழ் மாணவி பிரேமா ஜெயகுமார் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை (விழுப்புரம் மாவட்டம்) சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள் பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் (மலாட் பகுதியில்) வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.


Tuesday, January 22, 2013

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 1


குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழைய முடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். 
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் "ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை." என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல.


Monday, January 7, 2013

பெண்களுக்கான "ரோபோ" செருப்பு - ஒரு மிதிக்கு 'எலக்ட்ரிக் ஷாக்', 2 மிதிக்கு 'எஸ்.எம்.எஸ்'


தானே: மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண்களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், வன்முறையாளர்களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. 

Sunday, January 6, 2013

Fight Back : இந்தியாவின் முதல் பெண்கள் பாதுகாப்புகான மொபைல் பயன்பாட்டு மென்பொருள்

(To read this article in English...)

 என்  உடன்பிறவா சகோதரிகளே..! "மனதை ரணமாக்கிய" செயல்பாடுகளால் தனியே செல்ல பயப்படுகிறாயா? அல்லது வீட்டின் உள்ளே அடைந்து இருப்பதே பாதுகாப்பு என நினைககிறாயா? எத்தனை நாட்களுக்கு? இது போராட வேண்டிய நேரம். ஒரு பதிவர் என்ற முறையில், உன் பாதுகாப்புக்கு உதவும் ஒரு மொபைல் பயன்பாட்டு மென்பொருளை (mobile app) பற்றி பதிவிடுகிறேன்.
இதன் வழி  நீ தன்நம்பிக்கையுடன் சாலையில் நடக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

FightBack: பெண்கள் பாதுகாப்பு மென்பொருள், இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இது உங்கள் கைபேசியில் இருந்து SOS எச்சரிக்கைகள் அனுப்புகிறது. நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தெரிவிக்க ஜிபிஎஸ்(GPS), எஸ்எம்எஸ்(SMS), வரைபடங்கள்(Map), ஜிபிஆர்எஸ்(GPRS), மின்னஞ்சல்(EMail) மற்றும் உங்கள் Facebook கணக்கை பயன்படுத்துகிறது. 

Saturday, January 5, 2013

சர்க்கரையும் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பும்

நம்பிக்கையில் நாம் வாங்கி உபயோகிக்கிற பல உணவுப் பொருள்களிலும் சர்க்கரை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஷைனி.நாம் தேடித் தேடி சாப்பிடுகிற சைனீஸ் உணவுகள், நூடுல்ஸ், பிஸ்கட்... இப்படிப் பலதிலும் பிரதானம் சர்க்கரை. OSE என முடிகிற எந்த உணவிலும்  சர்க்கரை இருப்பதாக அர்த்தம். 

ஏற்கனவே நாம் சாப்பிடுகிற சாதம், கோதுமை உணவுகள், உருளைக்கிழங்கு, பால், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும்  போது, கூடுதலாக வேறு எதற்கு?’’ என்பவர், ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்கிறார். ஒரு  டீஸ்பூன் என்பது 5 கிராமுக்கு சமம்.


Friday, January 4, 2013

நான் "Public" பேசுறேன் சார்....

பொது இடத்தில் தன் கடமையை செய்ய தவறிய காவலரை, தட்டி கேட்கும் ஒரு சாதாரண மனிதனின் விஸ்பரூபம்.

வீடியோ வை கிளிக் செய்க


to read original post

Thursday, January 3, 2013

சிக்கனா..? இல்லை சிக்கலா..?


( பின்வரும் தகவல்கள் "பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள்" என்ற தலைப்பில்  "முகப்புத்தகத்தில் "  பகிரப்பட்டது )

பிராய்லர் கோழி  என்பது, பிறந்து 55நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணி. 
சரி இதுல என்னப்பா ஆபத்து.?

இந்த கோழி கறி விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். பிராய்லர் கோழி மற்றும் அதன் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருவதாகவும் கூறபடுகிறது.

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை மக்களிடம்  கொண்டு  செல்ல இயலவில்லை, அதலால் ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் வெளியிட்டார்கள்.

Wednesday, January 2, 2013

பக்கிங்ஹாம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்  (Buckingham Canal) - சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று,

Monday, December 31, 2012

பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா : சிஸ்டர் மேரி

பெங்களூரு புறநகர் ரயில் நிலையம்,
நிலையத்தின் படிக்கட்டை ஒட்டியு நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன் அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள் "உச்' கொட்டி பரிதாபட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.
இந்த நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி ஒருவர்,

19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள் : சகாயம் I.A.S. @ Dinamalar

""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.