Banner Wishes

செய்திகள்

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Wednesday, September 18, 2013

தமிழைத் தாங்கி வந்த ஐபோனின் புதிய வரவுகள் 5S மற்றும் 5C

பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. 

போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

Thursday, January 10, 2013

"லண்டன் டியூப்"- இன்று(ஜன.10) வயது 150..!

உலகில் முதன் முதலாக அமைக்கப்பட்ட "லண்டன் டியூப்" என்றழைக்கப்படும் சுரங்க பாதைக்கு, இன்று வயது 150!
உலகிலேயே முதன்முறையாக லண்டனில் தான் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது.

கடந்த 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜன 10ம் திகதி தொடங்கப்பட்ட ரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது.




Tuesday, January 8, 2013

கடத்தல்கார மியாவ்..மியாவ்..! சிறை பிடிப்பு!

பிரேசில்லா: பிரேசிலுள்ள  சிறையில்  கைதிகளுக்கு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை கடத்திய பூனையை, பிரேசில் நாட்டு, சிறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் உள்ளது அலகோயஸ் சிறை. இங்கு, 265 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரு பூனை, சிறைக்குள் இருந்து வெளியே வருவதும், போவதுமாக இருந்தது. இதை கவனித்த சிறை அதிகாரிகள், பூனையின் வயிற்று பகுதியில் ஏதோ, சில பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். 

Saturday, January 5, 2013

அமெரிக்க பார்லிமென்ட்டில் பகவத் கீதை படித்து பதவி ஏற்ற பெண்மணி


வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, கடந்த  நவம்பர் மாதம்  நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர்.

துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார். இது குறித்து துளசி கூறியதாவது:

Thursday, January 3, 2013

டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த குழந்தை

நியூயார்க்: 

 அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார்.