Banner Wishes

செய்திகள்

Saturday, February 23, 2013

தமாசு.. தமாசு.. கூகிள் விந்தைகள் பதிவு -1

போர் அடிக்குதா..? இல்ல வேலை பார்த்து பார்த்து ஓய்ந்துவிட்டீர்களா..? இல்ல தூங்கி வழிகிறீர்களா? ஒரு மாறுதலுக்கு, ஏதாவது சின்னதா, வித்தியாசமா, விளையாட்டு மாதிரி,  செஞ்சா நல்லாயிருக்கும்னு தோணுதா?. எப்படின்னு கேக்குறிங்களா. அதுக்கு  தான் நம்ம கூகிள் அண்ணே இருக்காருல..! ஆம் கூகுளின் அத்தகைய வினோத விளையாட்டுகளை பற்றியே இந்த பதிவு. இதனை பற்றி முன்பே தெரிந்தவர்கள், நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள் அறிந்து  கொள்ளுங்கள்.

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Thursday, February 14, 2013

தமாசு.. தமாசு..திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.



உணவு முறை - மாரடைப்பை தடுக்கும் திராட்சை!


இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்  ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

Tuesday, February 12, 2013

இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.