Banner Wishes

செய்திகள்

Saturday, June 8, 2013

கூகுள் மற்றும் பேஸ்புக்கை உளவு பார்க்கும் அமெரிக்கா...

கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க முடிவுக்கு கூகுள், மற்றும் பேஸ்புக் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்திட கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள இன்டர்நெட் உபயோகம் அழிவு செயலுக்கும் பயன்படும் விதமாக சில விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன என அமெரிக்கா கவலையுற்றுள்ளது. 

குறிப்பாக பயங்கரவாதிகள் தங்களின் செயல்பாடுகளை பேஸ்புக் மற்றும் கூகுள் மூலம் பரிமாறிக்கொள்வது அவர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடுகிறது. இதனால் இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்து ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அதாவது கூகுள் மற்றும் பேஸ்புக் பரிமாற்ற தகவல் குறித்தோ, அல்லது குறிப்பிட்ட ஒரு முகனர் குறித்தோ தகவல் கேட்கும் பட்சத்தில் தரப்பட வேண்டும் என்பதே ஆனால் இந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, இதற்கு அமெரிக்க அரசு மூலம் சான்பிரான்ஸிஸ்கோ கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சூசன் , மனுவை ஏற்றுக்கொண்டு அரசு கேட்கும் தகவல்களை கொடுக்க வேண்டும் என பணித்துள்ளது.

இணையதள சேவை வழங்குவோர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் தகவல்களை கேட்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூகுள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை கோர்ட் நிராகரித்து விட்டது. இத்துடன் உளவுத்துறை அதிகாரிகள் தங்களின் விசாரணைக்காக தகவல் கேட்பதில் எவ்வித தவறும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

கூகுள்- பேஸ்புக் கண்டனம்: இது போன்ற சட்டங்கள் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும் என கூகுள் - பேஸ்புக் கண்டனம் தெரிவித்துள்ளது. கூகுள் தலைமை அதிகாரி லேரி மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் ஆகியோர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நாட்டு பாதுகாப்பு குறித்து அரசின் தேவைகளை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.தவறான வழியில் கையாளப்படும் விதம் குறித்தும் கேள்வி எழுகிறது.

அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்பதும் பாதுகாத்திட வேண்டும். இது வரை அரசு தரப்பிலோ , கோர்ட் மூலமோ எங்களுக்கு எவ்வித உத்தரவும், ஆணையும் வரப்படவில்லை. இவ்வாறு வரும் நேரத்தில் நாங்கள் இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம். மேலும் எங்களில் சர்வரில் உளவுத்துறையினர் நுழைய முடியாது என்றும் யாரும், கேட்டுத்தான் பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

நன்றி - தினமலர் (to read original post)

No comments:

Post a Comment