Banner Wishes

செய்திகள்

Saturday, February 2, 2013

டேவிட் - கொலைவெறி விமர்சனம்

"ஜீவா", "விக்ரம்" கூட்டணியில், அப்டி, இப்டினு பெரியளவிலான பில்டப் கொடுத்து, கடைசியா பல்ப் வாங்கியுள்ள திரைக்காவியமே "டேவிட்". ஸ்ஸ்..முடியல. சும்மா கொத்து.. கொத்துன்னு.. கொன்னுட்டாங்க..!   
 சரி அப்படி என்னதான் படத்தோட கதை?
விக்ரம் , ஜீவா இருவரின் பெயரும் ஒன்று, அதாங்க டேவிட். இந்த இரண்டு பேரோட வாழ்க்கையில ஏற்படும் சம்பவங்களே படத்தின் ஒன் லைன். 

மும்பை 1999 : கிடார் கலைஞரான ஜீவா, தன் தந்தை நாசர் மற்றும் இரண்டு தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறார். பாதிரியாரான நாசர்,  மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகிறார் என்று கூறி சில மத அமைப்புகளால் தாக்கப்படுகிறார்.


 தன் தந்தைக்கு ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பதில் கேட்டு, அச்சம்பவத்திற்கு காரணமான ஒவ்வொருவராக தேடி போய்  சொல்லுங்க, பதில் சொல்லுங்க பதில் சொல்லுங்க, அப்டின்னு கேட்கிறார். இவர் எதிர்பார்த்த பதில் கிடைத்ததா? என்பதே  இவருடைய மீதி கதை.


கோவா 2010: விக்ரம், தனக்கு  நிச்சயம் செய்திருந்த பெண் கல்யாண நாளில் ஓடிப் போக , அந்த வருத்தத்தில் சதா சர்வ காலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். இந்த கடி போதாதுன்னு, இறந்து போன விக்ரமின் அப்பா, ஆவியாக மற்றவர்களின் உடம்பில் புகுந்து பேசுகிறார். பின் இவர் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட, காது கேளாத வாய் பேச முடியாத பெண் (இஷா ஷெர்வானி) மீது விக்ரமிற்கு திடீரென்று காதல் வருது. விக்ரமின் இந்த காதல் கைக்கூடியதா?  என்பதே  க்ளைமேக்ஸ்.

படத்தில் விக்ரம், குடிக்கிறார்..குடிக்கிறார்...குடிக்கிறார்...குடித்துக் கொண்டேயிருக்கிறார்.  பார்க்கும் நமக்கு தான் குமட்டல் வருகிறது. படத்தில் இவரை விட ஜீவாவுக்கே சற்று அழுத்தமான கதாபாத்திரம். கொஞ்சம் இளமையானதும்  கூட. விக்ரம் படம் முழுக்க குடிபாது போல, இவர் பதில் சொல்லுங்க, பதில் சொல்லுங்கனு இம்சை பண்றார்.

படத்தில் விக்ரமின் தோழியாக  தபுவும், ஜீவாவின் தோழியாக லாரா தாத்தாவும் வருகிறார்கள். மற்றபடி படத்தில் வரும் அனைத்து காதபாத்திரங்களும், வந்தார்கள், போனார்கள் என்றளவிலேயே உள்ளனனர்.

இந்த படத்திற்கு 6 இசையமைப்பாளர்கள் இருந்தும் ஒன்னும் சொல்லிக்கொள்ளும்படி  இல்லை. 

படத்தை இயக்கி இருப்பவர் மணிரத்னத்தின் உதவியாளராய் இருந்த பிஜோய் நம்பியார், தமிழ் திரை உலகின் இரண்டு முக்கிய ஹீரோக்களை கையில் வைத்திருந்தும், இயக்குனரால் சோபிக்க முடியவில்லை. அது என்ன கெட்டநேரமோ தெரியல.. குரு, மற்றும் சிஷ்யன் இருவர் படம் ஒரு நாளில் வெளியாகி போட்டி போட்டு  கொண்டு மண்ணை கவ்வியுள்ளது. 2 மணி நேர படம்னாலும், படம்  பார்த்து முடிப்பதற்குள், நம்ம பாடு திண்டாட்டம் தான்.

கடல் - திரைப்படத்தின் விமர்சனம் படிக்க....

No comments:

Post a Comment