Banner Wishes

செய்திகள்

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Sunday, January 6, 2013

லஞ்சம் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் - கருப்பு பக்கம்

( பின்வரும் தகவல்கள் "லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட்..! ஒரு அனுபவப் பகிர்வு!" என்ற தலைப்பில்  "முகப்புத்தகத்தில்"  பகிரப்பட்டது )

திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!


Friday, January 4, 2013

நான் "Public" பேசுறேன் சார்....

பொது இடத்தில் தன் கடமையை செய்ய தவறிய காவலரை, தட்டி கேட்கும் ஒரு சாதாரண மனிதனின் விஸ்பரூபம்.

வீடியோ வை கிளிக் செய்க


to read original post

Monday, December 31, 2012

19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள் : சகாயம் I.A.S. @ Dinamalar

""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.