Banner Wishes

செய்திகள்

Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, February 12, 2013

இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும். 

Wednesday, February 6, 2013

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும் ஸ்வர்ணக் குரல்!

"இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.

Wednesday, January 23, 2013

சார்ட்டர்டு அக்கௌன்டன்ட் (C.A) இறுதி தேர்வில் தமிழ் மாணவி முதலிடமெடுத்து சாதனை


மும்பையில் வாழும்  தமிழ் மாணவி பிரேமா ஜெயகுமார் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை (விழுப்புரம் மாவட்டம்) சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள் பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் (மலாட் பகுதியில்) வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.


Wednesday, January 16, 2013

"ஆட்டோகிராப்" - மாட்டு பொங்கல்

"டிவி' முன் பொழுதை கழித்து, பண்டிகைகளை பகல் கனவாய் கழித்து வரும், இந்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை கூட, நினைவூட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு வகையில் வேதனையான விஷயம் என்றாலும், நிகழ்வுகளை முன்வைக்கும் போது, இதைப் படித்தாவது, பாரம்பரியத்தை அறிந்து கொண்டால், சந்தோஷம் தானே! 

கிராமங்களிலும் நுழைந்த "டிவி', நம் கலாசாரத்தை கரையானாய் கரைத்ததன் விளைவு, மாட்டு பொங்கல் பண்டிக்கைக்கும் "ஆட்டோகிராப்' பட்டம் சூட்ட வேண்டிய கட்டாயம். 

Sunday, January 6, 2013

ஒரு தமிழனின் வெற்றி

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார். 


Friday, January 4, 2013

நான் "Public" பேசுறேன் சார்....

பொது இடத்தில் தன் கடமையை செய்ய தவறிய காவலரை, தட்டி கேட்கும் ஒரு சாதாரண மனிதனின் விஸ்பரூபம்.

வீடியோ வை கிளிக் செய்க


to read original post

Wednesday, January 2, 2013

பக்கிங்ஹாம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்  (Buckingham Canal) - சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று,