Banner Wishes

செய்திகள்

Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Monday, June 17, 2013

விகடனனின் "இன்ஜினீயரிங் கவுன்சிலிங் செல்வோர்க்காண A-z வழிகாட்டி"

பொறியியல் பட்டப்படிபிற்க்கான கலந்தாய்விற்கு செல்லும் மாணவ/மாணவிகளே,  கலந்தாய்வு பற்றிய சந்தேகங்களுக்கு A to Z எளிமையான வழிகாட்டி!

#.
வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 


இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

#. மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்

Thursday, June 13, 2013

160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வருகிறது

செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில்,  தந்தி சேவையை  வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.

Sunday, May 19, 2013

தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநங்கைக்கு அரசு பணி


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் குணவதி (33). திருநங்கையான இவர் எம்.ஏ. (ஆங்கிலம்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறார். இந்நிலையில் சமுதாயத்தில் தங்களைப் போன்ற திருநங்கைகள் மீதுள்ள மோசமான எண்ணத்தை மாற்ற வேண்டும். மற்றவர்களைப் போல் தாங்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு அரசு பணி வழங்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்திருந்தார்.

இவரது மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் இவரை தற்காலிகமாக பணியமர்த்தி உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு, குழந்தைகளை அருகில் குப்பையில் வீசிவிட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்கும் பணி குணவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, May 8, 2013

+2 தேர்வு முடிவுகள் - இணையதளங்கள், எஸ்.எம்.எஸ் விபரங்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,  காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதனை ஒட்டி  தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் அறிவித்தார். கலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடையில்லாமல் மின்சாரம் விநியோகம் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணைய தளங்களில் முடிவை காண மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண்களுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் பின்வருமாறு:
அரசு இணையதளங்கள்:
பிற இணையதளங்கள்:
மேலும்,  பிளஸ் 2 தேர்வு முடிவை எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறிய 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு "TNBOARD <REGISTRATION NO><DOB>" என்ற வடிவத்தில் குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில் தனது தேர்வு முடிவை அறிய TNBOARD125678,25/10/1995 என எஸ்.எம்.எஸ். செய்யவேண்டும். இந்த சேவை காலை 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே முன்கூட்டியே எஸ்.எம்.எஸ்.செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையம்('நிக்'), மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

Wednesday, April 10, 2013

திண்டுக்கல், தஞ்சை - நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்வு!!!

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 12, 2013

இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும். 

Wednesday, February 6, 2013

கேப்டனை கலாய்த்து சட்டசபையில் சொல்லப்பட்ட குட்டிக் கதை!


தமிழக முதல்வர் அவர்கள் விழாக்களில், சட்டசபையில் பேசும்போதும் குட்டிக் கதைகளை கூறுவார். ஏனென்றால் தான் சொல்ல வரும் கருத்தை கதையின் மூலமாக, விளக்கினால், அது மக்களை எளிதாக சேரும் ,கவரும் என்பதால், இந்த பாணியை கடைபிடித்து வருகிறார்.

அவரது பாணியை, அப்படியே அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அக்கதையாவது:

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும் ஸ்வர்ணக் குரல்!

"இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".

பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச்  சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.

சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.

Tuesday, February 5, 2013

விஸ்வரூபம் - நீக்கப்பட்ட காட்சிகள் விபரம்

பல்வேறு தடைகள் , சிக்கல்களை கடந்து, ஒரு வழியாக  வருகிற பிப். 7ம்தேதி விஸ்வரூபம் திரைக்கு வரும் என்று உறுதியாகியுள்ளது. 

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இப்படத்தில் குறிப்பிட்ட 7 காட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த காட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது.  அவை பின்வருமாறு:

Monday, January 21, 2013

வழக்கு எண் 18/9 - சிறந்த திரைப்பட விருது

பாரீஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது.

தெற்காசிய திரைப்பட விழாவில், தெற்காசியாவில் தயாரான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவின் நிறைவு நாளில் சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்து விருது வழங்கினர் .அந்த விருதை ‘வழக்கு எண் 18/9‘ திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல்வேறு பட விழாக்களில் இப்படம் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, January 16, 2013

"ஆட்டோகிராப்" - மாட்டு பொங்கல்

"டிவி' முன் பொழுதை கழித்து, பண்டிகைகளை பகல் கனவாய் கழித்து வரும், இந்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை கூட, நினைவூட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு வகையில் வேதனையான விஷயம் என்றாலும், நிகழ்வுகளை முன்வைக்கும் போது, இதைப் படித்தாவது, பாரம்பரியத்தை அறிந்து கொண்டால், சந்தோஷம் தானே! 

கிராமங்களிலும் நுழைந்த "டிவி', நம் கலாசாரத்தை கரையானாய் கரைத்ததன் விளைவு, மாட்டு பொங்கல் பண்டிக்கைக்கும் "ஆட்டோகிராப்' பட்டம் சூட்ட வேண்டிய கட்டாயம். 

Saturday, January 12, 2013

சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து சாதனை!


சென்னை ஐ.ஐ.டி சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து  சாதனை படைத்து உள்ளனர். 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன்  செயற்கை ரத்தம் தயாரிப்பு  குறித்த ஆய்வுகளை சென்னை ஐ..ஐ.டி.க்கு செய்து வந்தது. இதற்கென ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது.  அக்குழுவிற்கு டாக்டர்  சோமா குஹ்தாகுர்தா (Dr.Soma Guhathakurta) தலைமை வகித்தார். டாக்டர் சோமா மற்றும் அவர் குழுவினரின் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக,  ஸ்டெம் செல்களில் இருந்து ரத்தச் சிவப்பு அணுக்களைப் பிரித்து  எடுத்து அதன் மூலமாக செயற்கை முறையில் ரத்தம் தயாரித்தனர்.

Thursday, January 10, 2013

சன் பிக்சர்ஸ் - ன் "செகண்ட் இன்னிங்ஸ்"



வெகு நாட்களுக்கு  பிறகு சன் பிக்சர்ஸ் இப்பொழுது மீண்டும் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
சன் குழுமத்தின்  ஒரு அங்கமான  "சன் பிக்சர்ஸ்" 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவக்கம்  முதலே அதிரடியாக சில தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் (ரஜினிகாந்த் நடித்த எந்திரன், ஆடுகளம் ), பல  படங்களை வாங்கி வெளியிட்டும்(அயன்,சிங்கம்,வேட்டைக்காரன்..etc .,) வந்தது.  தன் தொலைக்காட்சி விளம்பரத்தின் வாயிலாக பல படங்களை வெற்றி படமாக்கி பெரும் லாபம் ஈட்டினர்.

Tuesday, January 8, 2013

ஊர் சுற்றலாம் வாங்க - ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தளங்கள். ஒரு பார்வை:
பவானி சாகர் அணைக்கட்டு:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மணலால் கட்டப்பட்டது. சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. கடல்போல நீர் தேங்கித் ததும்பும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதன் உயரம் 105 அடி இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். 

ஈரோடு காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?


காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.

Sunday, January 6, 2013

ஒரு தமிழனின் வெற்றி

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார். 


ஊர் சுற்றலாம் வாங்க - திண்டுக்கல் மாவட்டம்


வியத்தகு திண்டுக்கலின் வழிபாட்டுத் தளங்கள் - ஒரு பார்வை

அபிராமி அம்மன் கோயில் : 

திண்டுக்கல் நகரில் அருள் பாலிக்கும் அபிராமி அம்மனுக்கு வைக்கப்படும் நவராத்திரி கொலு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையின்போது அபிராமி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார்.....


சென்னையில் நடிகர், நடிகைகள் நாளை உண்ணாவிரதம்


சென்னை: சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இதில், ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைககள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் தொலைக்காட்சி துறை தொழிலாளர்களுக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. 

Saturday, January 5, 2013

திம்பம் மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் சரக்கு லாரி உருண்டது

சத்தியமங்கலம், :  திம்பம் மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு ஏராளமான சரக்கு வாகனங்கள் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த மலைப்பாதையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட அளவான 16 டன் எடைக்கும் மேற்பட்ட அதிகளவில் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் பழுது ஏற்பட்டு அடிக்கடி குறுகலான சாலையில் நின்று விடும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நகர முடியாத நிலை உருவாகும்.

Wednesday, January 2, 2013

ஊர் சுற்றலாம் வாங்க - முக்கொம்பு (திருச்சி மாவட்டம்)

முக்கொம்பு இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும் .
காவிரி ஆற்றின் குறுக்கே  திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து  15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
      இது திருச்சிக்கு அருகே உள்ளது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.
இது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன்  என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.
   குழந்தைகள் , பெரியவர்கள் , இளைஞர் அனைவருக்கும் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம்.விடுமுறை நாட்களில் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல சிறந்த இடம்.
இங்கு சுற்றிபார்க்க நுழைவுகட்டணம் = ரூ.5 
 நன்றி :விக்கிபீடியா