Banner Wishes

செய்திகள்

Wednesday, May 8, 2013

+2 தேர்வு முடிவுகள் - இணையதளங்கள், எஸ்.எம்.எஸ் விபரங்கள்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,  காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதனை ஒட்டி  தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் அறிவித்தார். கலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடையில்லாமல் மின்சாரம் விநியோகம் மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணைய தளங்களில் முடிவை காண மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண்களுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் பின்வருமாறு:
அரசு இணையதளங்கள்:
பிற இணையதளங்கள்:
மேலும்,  பிளஸ் 2 தேர்வு முடிவை எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறிய 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு "TNBOARD <REGISTRATION NO><DOB>" என்ற வடிவத்தில் குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில் தனது தேர்வு முடிவை அறிய TNBOARD125678,25/10/1995 என எஸ்.எம்.எஸ். செய்யவேண்டும். இந்த சேவை காலை 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே முன்கூட்டியே எஸ்.எம்.எஸ்.செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவல் மையம்('நிக்'), மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு முடிவை, 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், பார்ப்பர். 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவை வெளியிடும்போது, மாணவர், பெற்றோர் அனைவரும், வெவ்வேறு இணையதளங்களில், தேர்வு முடிவை பார்ப்பதால், இணைய தளத்தில் எந்த சிக்கலும் எழுவதில்லை.

அதேநேரத்தில், பல லட்சக்கணக்கானோர், நான்கு இணைய தளங்களில் மட்டும் தேர்வு முடிவை பார்க்க நேர்ந்தால், "சர்வர்' தாங்காது. இணைய தளம் முடங்கும் ஆபத்தும் உள்ளது. தேர்வு முடிவை, எளிதில் தெரிந்து கொள்ளும் உரிமை, மாணவர்களுக்கு இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், இத்தனை இணையதளங்களில் மட்டுமே வெளியிடுவோம் என, கூறுவது சரியல்ல.

இந்த விவகாரத்தில், தனியார் நிறுவனங்கள், வர்த்தக ரீதியாக செயல்படுகின்றன என்பதை பார்க்கக் கூடாது. மாணவர்கள், எவ்வித பிரச்னையும் இன்றி, உடனுக்குடன், தேர்வு முடிவை தெரிந்து கொள்கிறார்களா என்பதைத் தான் பார்க்க வேண்டும். படிப்பிற்காக, பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கும் பெற்றோர்களுக்கு, 10 ரூபாயோ, 20 ரூபாயோ செலவழித்து, இணையதளங்களில் முடிவை அறிவது, பிரச்னையாக இருக்காது.

அரசு தெரிவித்துள்ள இணைய தளங்களில், பிரச்னை ஏற்பட்டால், மாணவர்கள் கடுமையாக பாதிப்பர். பெரும் குழப்பமும் ஏற்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை சிக்கலை, தேர்வுத்துறையும் உணர்ந்துள்ளது. ஆனால், மேலிட அளவில் எடுத்த முடிவு என்பதால், நாளை என்ன நடக்குமோ என, தேர்வுத்துறை, "திக்... திக்...' நிலையில் உள்ளது.



மதிப்பெண் பட்டியல் எப்போது கிடைக்கும்?

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மதிப்பெண் பட்டியலையும், விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். ஆனால், 15 தேதிக்குப் பிறகே, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, தெரிகிறது. இதனால், கடைசி நாட்களில், அவசரம், அவசரமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நன்றி - தினமலர் (to read original post)


No comments:

Post a Comment