Banner Wishes

செய்திகள்

Saturday, May 18, 2013

மீண்டும் ஒரு காதல் சின்னம்

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.

தனக்கு சொந்தமான இடத்தில், 50 ஆண்டு கால உழைப்பில் சேர்த்து வைத்த, 20 லட்சம் ரூபாயை செலவழித்து, 1,000 சதுர அடி பரப்பளவில், சிறிய அளவிலான, தாஜ்மகால் போன்ற நினைவு கட்டடம் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கட்டடம், தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவிலிருந்து, 160 கி.மீ., தொலைவில் உள்ளது.இதுகுறித்து, பைசல் ஹசன்கூறியதாவது :

தாஜ்மகாலை கண்டு, நான் கிண்டல் செய்துள்ளேன். காதலுக்காக, இவ்வளவு தொகையை செலவழித்த, ஷாஜகானை பற்றியும் விமர்சித்துள்ளேன். ஆனால், என் மனைவியின் பிரிவிற்கு பிறகே, காதலின் அருமை எனக்கு புரிந்தது.உண்மையான அன்புக்கு முன், எதுவும் பெரிதல்ல என்பதைஉணர்ந்தேன். சிறிய அளவில் கட்டியுள்ள நினைவு மண்டப கட்டடத்தை, 5,000 சதுர அடி அளவுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுஉள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்



No comments:

Post a Comment