Banner Wishes

செய்திகள்

Thursday, January 10, 2013

சன் பிக்சர்ஸ் - ன் "செகண்ட் இன்னிங்ஸ்"



வெகு நாட்களுக்கு  பிறகு சன் பிக்சர்ஸ் இப்பொழுது மீண்டும் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
சன் குழுமத்தின்  ஒரு அங்கமான  "சன் பிக்சர்ஸ்" 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவக்கம்  முதலே அதிரடியாக சில தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் (ரஜினிகாந்த் நடித்த எந்திரன், ஆடுகளம் ), பல  படங்களை வாங்கி வெளியிட்டும்(அயன்,சிங்கம்,வேட்டைக்காரன்..etc .,) வந்தது.  தன் தொலைக்காட்சி விளம்பரத்தின் வாயிலாக பல படங்களை வெற்றி படமாக்கி பெரும் லாபம் ஈட்டினர்.

 சன் பிக்சர்ஸ் என்றாலே படம் வெற்றியடைந்துவிடும் என்கின்ற அளவுக்கு தோற்றத்தை ஏற்ப்படுத்தி இருந்தனர். ஆனால் 2012 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சன் பிக்சர்ஸின் நிலை தலை கீழ் ஆனது. சன் பிக்சர்ஸின் அதிகாரி சக்ஸ்சேனா கைது, மோசடி புகார்கள் என "சனி பெயர்ச்சியே" நடந்துவிட்டது. இதை தொடர்ந்து  சன் பிக்சர்ஸ் படங்களை தயாரிப்பதோ வெளியுடுவதோ இல்லை, நீண்ட நாட்கள் விலகியே இருந்தது. சென்ற ஆண்டின் வெளியான "மங்காத்தா" திரைப்படத்தை "க்கெளட் நைன் மூவீஸ்" இணைந்து  வெளியிட்டனர்.
வெகு நாட்களுக்கு  பிறகு இப்பொழுது மீண்டும் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த வகையில்"ராடன் மீடியா ஒர்க்ஸ்" தயாரிக்கும்   “சென்னையில் ஒரு நாள்” (மலையாளத்தில் வெற்றி படமான "டிராபிக்" ரீமேக்) படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள்.  இப்படத்தை தயாரித்தவர் ராதிகா சரத்குமார். இதன் வழியாக சன் பிக்சர்ஸின் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாகிவுள்ளது. 

No comments:

Post a Comment