Banner Wishes

செய்திகள்

Friday, January 25, 2013

இந்திய குடியரசின் தோற்றமும் அதன் வரலாறும்


பதிவுலக நண்பர்களுக்கு "நண்பர்கள் உலகத்தின்" சார்பாக "இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்".

இந்தியக் குடியரசு தினம் இந்திய ஆட்சியமைபுக்கான ஆவணமாக இந்திய ஆரசியல்லமைப்பு 1935 இன் மாற்றாகஇந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள்.
இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறைநாட்களில் இதுவும் ஒன்று.நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர் மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் விழா தொடங்கும்.

விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார்சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
வரலாறு:
இந்தியாவை விட்டு 1947 இல் வெள்ளையர்கள் வெளியேறுவதற்கு முன்னர்,1930ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் இந்திய விடுதலை இயக்கதினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அமைப்பின் அறைக்கூவலை நினைவு படுத்த இந்திய சுதந்திர நாளாக தேசியவாதிகளால் கொண்டாடப் பட்டதுஎன்றும் அந்த பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே பின்னர் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய குடியரசு நாளாக ஏற்றுக் கொள்ளப் பட்டதுஇதை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தியாவின் தேவை பூரண சுதந்திரமே என்ற தீர்மானம், 1929 ஆம் ஆண்டு ஜவர்கர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப் பட்டதுமேலும் 1930 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர நாளாக இந்திய மக்கள் அனுசரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது


இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் விடுதலை நாளாக தேசிய உணர்வுள்ள அனைவராலும் 1947 ஆம் ஆண்டு வரை அனுசரிக்கப் பட்டு வந்ததுஇந்தியருக்கு 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் வழங்குவதாக முதலில் தீர்மானித்திருந்த பிரிட்டிஷ் அரசுதிடீரென 1947 ஆம் ஆண்டிலேயே இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்துஆகஸ்ட் 15 ஆம் தேதி நடு இரவில் இந்திய நாட்டிற்கு விடுதலை தந்தது.

இடையேபிரிக்கப் படாத இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியல் வடிவமைப்பு நிர்ணய சபை 1946 இல் பிரிட்டிஷ் அரசால் அமைக்கப் பட்டதுஇதன் முதல் கூட்டம் டிசம்பர் 1946 இல் நடை பெற்றதுஇதன் உறுப்பினர்கள்அப்போதைய பிராந்திய பிரதிநிதித்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் இந்திய சிறு அரசவை ஆகியவற்றால்அந்தந்த பிரதேச மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

சுதந்திர இந்தியாவில் (திருத்தி அமைக்கப் பட்டஇந்த பேரவை முதல் முறையாக அக்டோபர் 1947 இல் கூடியதுஇதன் தலைவராக அரசியல் சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கர் செயல்பட்டார்பல்வேறு விவாதங்களுக்குப் பின்னரும்பொது கருத்துக்களை கேட்டறிந்த பின்னரும் இறுதியான அரசியல் வடிவமைப்பு சாசனம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முழுமையான வடிவு பெற்றது.

ஆனால்விடுதலை போராட்ட வீரர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில்ஜனவரி 26 ஆம் நாள்இந்தியாவின் குடியரசு தினமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுஅந்த நாளில்இந்தியாவின் அரசியல் வடிவமைப்பு சாசனம் அமலுக்கு கொண்டு வரப் பட்டது. (குடியுரிமைதேர்தல்கள்தற்காலிக பாராளுமன்றம் போன்ற சில பிரிவுகள்நவம்பர் மாதம் முதலே அமலுக்கு வந்து விட்டன).
இப்படி ஜனவரி 26 ஆம் ஏற்றுக் கொள்ளப் பட்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டுஅவையாவன.

1. 
உலகின் மிக நீளமான எழுதப் பட்ட அரசியல் சாசனம் இந்திய அரசியல் சாசனம்அமெரிக்காவை போல மேலோட்டமான அடிப்படைப் பிரிவுகளை மட்டுமே கொண்டிருக்காமல்முழுமையான தீர்வுகள் பலவற்றையும் இந்திய அரசியல் சாசனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

2. 
உலகின் (அன்றிருந்தசிறந்த அரசியல் சாசனங்களின் முக்கிய அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற வைக்கப் பட்டனஅந்த நாடுகளின் சாசனங்கள் செயல் பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்திய சாசனத்தில் நுண்ணிய பிரிவுகள் அமைக்கப் பட்டன.

3. 
காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ள ஏதுவாகஎளிதில் திருத்தியமைக்க அரசியல் சாசனத்தில் சில பிரிவுகள் அமைக்கப் பட்டனஉலகிலேயே நெகிழ்வுத் தன்மை அதிகம் கொண்ட சாசனம் இந்திய சாசனம் என்று கருதப் படுகிறது. (சமீபத்திய தீர்ப்பில்உச்ச நீதி மன்றம்அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்றி அமைக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது).

4. 
இந்திய குடிமக்களுக்கு மட்டுமில்லாமல்இந்தியாவில் வாழும் பிற நாட்டு குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் வழங்குவது நமது அரசியல் சாசனம். (இது பல நாடுகளில் கிடையாது)

5. 
அடிப்படை உரிமைகள் மட்டுமில்லாமல்குடிமக்களுக்கான சில அடிப்படை கடமைகளையும் உள்வைத்தது நம் அரசியல் சாசனம்.

6.
அடிப்படை உரிமைகளை காக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத்திற்கும் உயர்நீதி மன்றங்களுக்கும் வழங்கிய இந்திய அரசியல் சாசனம்அந்த உரிமைகளை பெற்றுத் தர நீதிமன்றங்களிடம் கோரும் உரிமையை இந்திய மக்களுக்கும் வழங்கியது.
இப்படி பல வகையிலும் சிறப்பு பெற்றது நமது அரசியல் சாசனம்நாம் இன்று அனுபவிக்கும் தனி மனித சுதந்திரத்திற்கு அடிகோலியது இந்த அரசியல் சாசனமேமிகுந்த தேசப் பற்றும்தியாக உணர்வும் கொண்ட சிறந்த தலைவர்களின் கடும் உழைப்பில் உருவாக்கப் பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகளுக்கு முழு மரியாதை கொடுப்போம் .
வாழ்க பாரதம்..! வாழ்க பாரத சமுதாயம்..! ஜெய்ஹிந்த்.

No comments:

Post a Comment