Banner Wishes

செய்திகள்

Friday, January 4, 2013

கோழி கூவுது - சினிமா விமர்சனம்


தமிழ் சினிமா வின் வழக்கப்படி, ஏழை சேவலும்(ஹீரோ), பணக்கார கோழியும்(ஹீரோயின்) லவ் பண்றாங்க. வழக்கம்போல காதலுக்கு எதிர்ப்பு வருது, இந்த எதிர்ப்பை தாண்டி எப்டி ஹீரோவும், ஹீரோயினும் "கொக்கரக்கோ" கூவுராங்க தான் படத்தின் ஒன் லைன். நமக்கு பறிச்சியபட்ட கதை தான் என்றாலும், கதை களமாக கிராமத்துப் பின்னணியை தேர்ந்தெடுத்திருப்பது ரசிக்கவே வைக்கிறது. 

சாதாரண  கோழி குஞ்சுகளை வாங்கி,அவற்றிக்கு  கலர் அடித்து பல விதவிதமான கோழிகுஞ்சுகள் என ஊர் ஊராக போய் விற்கிறார் ஹீரோ  குமரேசன் (அஷோக்). அவ்வாறாக ஹீரோயின்   துளசியிடம் (சீஜா ரோஸ்).   கோழி  விற்று அதற்காக அவரின் காதலை விலையாக பெறுகிறார் குமரேசன். ஆனால் துளசி ஊர் பெரும் பணக்காரர் துரைசிங்கத்தின்()  மகள், அவருக்கு குமரேசன்&துளசி காதல் தெரிய வர,  தன்  தம்பி கம் துளசியின் சித்தப்பா அய்யனார்() மூலம் குமரேசனைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். அதன்பின் குமரேசன்&துளசி காதல் வென்றதா? இல்லையா? என்பதை இந்த கோழி கூவுது.

கிராமத்து இளைஞன் குமரேசன் கதாபத்திரத்தில் வரும் ஹீரோ அஷோக் கேரக்டருக்கு சரியாக பொருந்தி இருக்கிறார். (சாதாரண கோழியை வாங்கிக் கொண்டுபோய் அதை எவ்வாறு விதவிதமான கோழிகுஞ்சுகளாக  மாற்றுகிறார்கள், என அந்த தொழிலை பற்றி ஒளிவு மறைவில்லாமல் காட்டியிருப்பது சூப்பர்). இவர் "கோழி", "கோழி" என்று கூவுகிற ஸ்டைல்  ரசிக்க வைக்கிறது. காதலியின் வீட்டாரிடம் அடி வாங்கும் போது பரிதாபத்தையும்,  மற்ற இடங்களில் கை தட்டல்களையும் அள்ளுகிறார்.

ஹீரோயினாக புதுவரவு  சிஜா ரோஸ். ரொம்ப அப்பாவிதனமான கதாபத்திரம், இவரும் பார்பதற்கு மென்மையாக இருப்பதால், நம் மனதில் பதிந்து விடுகிறார். மயில்சாமி காமெடி பொறுப்பேற்று சிரிக்க வைக்கிறார்(அப்பபோ).  ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி,  ஹீரோயின் பாட்டியாக வரும் ஜோதி லட்சுமி, ஹீரோயின் சித்தப்பா கேரக்டரில் வரும் போஸ் வெங்கட் என அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து நடித்திருக்கின்றனர். ஹீரோவுக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபத்திரம் "ஆடுகளம் " நரேன் உடையது . இவருக்கும் ஹீரோயினுக்கும் இடையிலான "தந்தை -மகள்" பாசம் போராட்டம், நரேனுக்கு கை தட்டல் வாங்கி  தருகிறது.

இப்படத்தை எழுதி, இயக்கியவர்  கே.ஐ.ரஞ்சித், கிராமத்துப் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இ.எஸ்.ராம்ராஜ். பின்னணி இசை மற்றும் பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும்  ‘வாடாமல்லிக்காரி’ மென்மையான  மெலடி முனுமுனுக்க வைக்கிறது. படத்தில் ஒரு பாடலை எம்.எஸ்.வி. பாடியிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த கோழி சற்று உரக்கவே  கூவி இருக்கிறது.

No comments:

Post a Comment