Banner Wishes

செய்திகள்

Friday, January 11, 2013

அலெக்ஸ் பாண்டியன் - தரை டிக்கெட் விமர்சனம் @ டைம் பாஸ் ஆன்லைன்டைம் பாஸ் விகடனில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் விமர்சனம்: முகப்புத்தகத்திலிருந்து....
சந்தானத்தை கவுண்டமணியோட க்ளோனிங்குன்னு சொல்லுவாய்ங்கள்ல... ஆனா இனி வெண்ணிற ஆடை மூர்த்தியோட க்ளோனிங்குன்னு சொல்லுவீங்க. அம்புட்டு டபுள் மீனிங்.
                                     
 ‘என் தங்கச்சிய கரையேத்தணும்’னு சொல்ற சந்தானத்துக்கிட்ட கார்த்தி, ‘நானும் ஏத்தவா?’னு கேக்குறார். ‘நீ எதை ஏத்துவேன்னு தெரியும். தள்ளிப்படுடா!’னு சந்தானம் சொல்றார். 

அட இதாச்சும் பரவாயில்லைங்க. ‘டே குத்து விளக்கு மாதிரி இருக்குற என் தங்கச்சிய குனிய வச்சு என்னடா பண்றே?’னு ஒரு சீன்ல கேக்குறார். ‘நான் பாண்டி ஆடுறேன்’னு கார்த்தி சொல்றார். ‘நீ தாண்டி விளையாடுவே அப்புறம் தூண்டி விளையாடுவே’னு ஸ்ட்ரெய்ட்டா அட்டாக் பண்றார். ‘தங்கச்சியோட பொறந்த அண்ணன் ஆந்தை மாதிரி காவல் காக்கணும்!’னு அரிய தத்துவம்லாம் சொல்றாரு. ஆக்ச்சுவலி சந்தானம் மட்டும் இல்லைனா மரண மொக்கையாய் இருந்திருப்பான் இந்த அலெக்ஸ் பாண்டியன்!

கார்த்தி சில இடங்கலில் வரம்பு மீறி பேசுகிறார். ‘கேரம் காய்ன்னை தமிழ்ல ‘காய்’னுதானே சொல்லுவோம்... அதான் காயடிச்சேன்னு சொல்றேன்’னு நம்ம கார்த்திதான் பேசுறார். சிவக்குமார் பெத்த புள்ளையா இப்படி பேசுதுனு வாயைப் பொளக்காதீங்க சின்னப் பய மக்களே! ஜென்டில்மேன்ல நாம பார்த்த ஜலபுல ஜங், டிக்கி லோனா, கப்ளிங் கேம்லாம் ஆடி இருக்காரு கார்த்தி.

ஆனா சண்டைனு வந்துட்டா சீனா கொசு பேட்டால மார்கழிமாசக் கொசுவை அடிக்கிற மாதிரி வில்லனுகளை அடிபின்னி எடுக்குறாரு... ஓவரா சலம்புறாரு. சுமோவுக்கே கட்டையக் கொடுத்து வானத்துல பறக்க விடுறாரு. இந்த அறிவு கெட்ட ஜிம்பாய்ஸும் இன்னும் எத்தனை படங்கள்ல சுமோவுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு வெளிலே அரிவாளை நீட்டிக்கிட்டே சேஸ் பண்ணுவாய்ங்கனு தெரியலை. சந்தானமே ஒரு சீன்ல, ‘டீசல் விக்குற விலையில இத்தனை வண்டியல ஏன்டா தொறத்துறாங்க?’னு கேட்குறார். நமக்கும் அதான் பாஸ் தோணுது.

ஆப்பிள் அழகி அனுஷ்காவை அநியாயத்துக்கு வீணடிச்சிட்டீங்களே... ஆனா, அந்த இடுப்பு டான்ஸ்லயும், காட்டுவாசி டான்ஸ்லயும் அப்படியே மனசுக்குள்ள நிக்குது பொண்ணு.

க்ளைமாக்ஸில் ஊறப்போட்டு கார்த்தியை அடிக்கிறாங்கப்பா. ‘ஆம்பிளையா இருந்தா அவர் கட்டை அவுத்துட்டு அடிங்கடா’ என்று அனுஷ்கா சொல்றாங்க. கட்டம் சரியில்லாத வில்லன்களும் கட்டை அவிழ்த்துட்டு கட்டவிழ்ந்த காளைகிட்ட முட்டு வாங்கி சாவுறாங்க. மிலிந்த் சோமன் கொஞ்சம் மெலிந்த சோமனாட்டம் இருக்கார். சுமன் சும்மனாச்சுக்கும் வில்லனா வந்து அடிவாங்கி சாவுறார். ஸ்....யப்பா முடியல!

சுராஜுக்கு நிலவேம்பு கசாயம் பார்சே....ல்!


மேலும் பொங்கல் வெளியீடு திரைப்படங்களின் விமர்சனங்களுக்கு.....
நன்றி 'டைம் பாஸ் ஆன் லைன்'

1 comment:

  1. Alexpandian Movie, Karthik Latest Movie, Alexpandian Tamil Movie. Find Alexpandian Latest News and Review Click this http://www.valaitamil.com/alex-pandian-tamil-movie-review_8285.html

    ReplyDelete