Banner Wishes

செய்திகள்

Monday, January 14, 2013

சமர் - திரிலிங் விமர்சனம்


இடியாப்ப சிக்கல் போல பல பல ட்விஸ்ட்கள் கொடுத்து ஒரு திர்லர் படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் 'திரு'. 
கதைஊட்டியில் விஷாலும், சுனைனாவும் லவ்ராங்க. ஆனா விஷால் லவ்வ பார்ட் டைமாகவும், மற்ற வேலைகளை முழு நேரமாகவும் செய்றார்

இதனால் சுனைனா "போடா, நீயும் உன் லவ்வும்னு" சொல்லிட்டு பாங்காக் போயிடறார். சில நாட்களுக்கு பிறகு சுனைனாவிடமிருந்து ஒரு லெட்டர் வருதுதன்னால் விஷாலை மறக்க முடியவில்லை என்றும், உடனே பார்க்க வேண்டும் கிளம்பி வா சொல்லி, லெட்டருடன் பிளைட் டிக்கெட்டையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அதனால விஷால் பாங்காக் கிளம்புறார். அதே விமானத்தில்  பாங்காக்  செல்லும் த்ரிஷாவுடன் நட்பாகிறார்.  பாங்காக் சென்று பார்த்தால்  சுனைனா வரவேயில்லை
அப்போது அங்கு  வரும் கமாண்டர் சம்பத் இவருக்கு  உதவுகிறார்,ம், அவரின் ஆலோசனைப்படி, விஷால்  சம்பத்  வீட்டில் தங்கி , அடுத்த நாள்  சுனைனாவை தேடிச் சொல்கிறார். ஆனால் எங்கு பல இடங்களில் தேடியும் சுனைனா கிடைக்கவில்லை. அதற்கு பதில் விஷாலை தேடி சில வில்லன் கும்பல் வருகிறார்கள். அந்நேரத்தில், மனோகரன் எனும் கேரக்டர் வந்து விஷாலை காப்பாற்றுகிறார், அத்துடன்  நில்லாமல் விஷால் தான் தனது முதலாளி சக்தி, மற்றும் அந்நாட்டின் பெரும் பணக்கார முக்கிய புள்ளி என்று சொல்கிறார்

இதற்கிடையில் ஒரு புது கேரக்டர் வந்து, "தான் விஷாலின் கட்டளையின் பேரில், கொலை செய்ததாகவும், அதற்க்கான பணத்தை தருமாறு மிரட்டுகிறார். சரி தரேன்னு சொல்லிட்டு விஷால் எஸ் ஆகி, போலீசில் புகார் செய்யலாம் என போனால், அங்குள்ளவர்கள் இவருக்கு சலியூட் அடிக்கிறார்கள். இபோ விஷாலுக்கு மட்டுமல்ல நமக்குமே தலை சுத்துது. சரி வினையே வேண்டாம், திரும்பி ஊருக்கே போகலாம் முடிவு பண்ணா, சில காரணத்தால் அது நடக்கல. சரி இங்கயே சக்தினு இருபோனு ரூம்க்கு போன, "யாரடா, நீ.. கெட் அவுட்னு சொல்லராங்க. இதற்கு முன் இவருக்கு உதவுன யாரையும் காணோம். ஒரே உறவு, உதவி எல்லாம் த்ரிஷா தான், ஒரு சமயத்தில் யாரோ 2 பேர் தான் இங்கு நடக்கும் அனைத்திற்கும் காரணம்னு தெரிய வருது. 

த்ரிஷாவின் மாமாவின்(ஜெயபிரகாஷ்) உதவியுடன் அந்த 2 நபரையும் தேடுகிறார். ஒரு கட்டத்தில் சுனைனாவை பார்த்து, தனக்கு வந்து லெட்டர், டிக்கெட் அவர் அனுப்பவில்லை, ஏன் அவர் விஷாலை மறந்தே விட்டார் என தெரிந்துகொள்கிறார். இபோ த்ரிஷா தன  காதலை விஷாலிடம் சொல்ல, அவரோ அதை நிராகரித்துவிட்டு, ஊருக்கே  திரும்ப போலாங்ற்ப்போ, சிலர்  த்ரிஷாவை கடத்த, அவரை காப்பாற்ற விஷால் செல்கிறார்

இப்போ 2 வில்லன்கள் என்ட்ரி, இந்த  2 பேரும் (மனோஜ் & சக்கரவர்த்தி), யாராவது ஒருவருக்கு இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்கி, அந்த சூழ்நிலையில் அவர்கல் தற்கொலை செய்து கொள்வார்களா? இல்லையா? என "பெட்" கட்டி விளையாடும்.. லூசுகள். அதன் படியே விசாலுக்கு மேற்கண்ட குழப்பமான சூழ்நிலை. இங்க இன்னொரு ட்விஸ்ட், இதனை நாள் இவருக்கு உதவியா இருந்த  த்ரிஷாவும் ஒரு கருப்பு ஆடு தான். அது ஏன் அப்டின்னு ஒரு சென்டிமென்ட் ரீசன் சொல்றாங்க. இப்போ விஷால்த்ரிஷா, சம்பத், ஜெயபிரகாஷ் சேர்ந்து வில்லன்கள் 2 பேருக்கும் அவுங்க ட்விஸ்ட்ட்டையே திருப்பி வைச்சு, போட்டுத்தள்றாங்க. படம் ஓவர்.

படத்தில் ட்விஸ்ட்களை முக்கியமாக வைத்து,திர்லர் படத்தை தர முயற்சித்து.. ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர். ஹீரோ விஷால், எதையோ பறிகொடுத்தது போல்  இருக்கிறார். ரொம்ப கவலைதோய்ந்து காணப்படுகிறார்
ஹீரோயின்களாக சுனைனா மற்றும் த்ரிஷா, சுனைனா கேரக்டர் ஊறுகாய் போலவே. த்ரிஷா நன்றாகவே நடித்திருக்கிறார். வில்லன்களாக( காமெடியன்களாக) மனோஜ் பாஜ்பாய் & J.D.சக்கரவர்த்தி.. சைக்கோ என்று சொல்லி லூசுதனம் செய்திருக்கிறார்கள். 

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். அழகோ அழகு பாடல் நல்ல மெலடி (அழகோ அழகு - வீடியோ பாடல்). மொத்தத்தில் வாங்கிய டிக்கெட் வீண் இல்லை.பொங்கல் ரீலிஸ் படங்களில் வெற்றி வரிசையில் வந்து விடும்.


No comments:

Post a Comment