Banner Wishes

செய்திகள்

Friday, January 11, 2013

அலெக்ஸ் பாண்டியன் - சினிமா விமர்சனம்

இயக்குனர் சுராஜின் முந்தையப் படங்களான படிக்காதவன், மாப்பிள்ளை-யிலிருந்து எந்த மாறுதலும் இல்லாமல், கமர்சியல் மசாலா என்டர்டெயின்னர் என்ற போர்வையில் வெளிவந்திருக்கும் லாஜிக் இல்லா மேஜிக்கே இந்த "அலெக்ஸ் பாண்டியன்".

கதைப்படி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டமக்களுக்கு தீங்கு விளைவிக்கும்மருந்துகளை வில்லன் கும்பல், எவன் எப்டியோ போகட்டும் நாம நல்லா இருந்த சரின்னுதமிழ் நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டம் போடறான். ஆனா அதுக்கு CM அனுமதி தரமாற்றார். வில்லன் காண்டாகிஹீரோவ வச்சு (ஏன்னா ஹீரோ  பணத்துக்காக வேல செய்யும் அடியாள்ஹீரோயின் + CM ன் மகளை கடத்தி ப்ளாக் மெயில் பண்றார். மகளுக்காக CM ம் அனுமதி தர சம்மதிக்கிறார் இதுக்கிடைல ஹீரோயின் ஹீரோகிட்ட டீல் பேசுற அதாவது ஹீரோயினை பத்திரமா அவுங்க அப்பாட்ட ஒப்படச்சா பணம் வாங்கி தரேன்னு , உடனே ஹீரோவும் , வில்லன்கள அடிச்சு போட்டு, 'எல்லாத்தையும்' காப்பாதுறார். ஆனா பாவம் ரசிகர்கள.. காப்பாத்த முடியல. இவ்வளவு தான் கதை. 

இவ்வளவு "பெ..பெரிய" கதைய எப்படி சொல்றதுனு டைரக்ட்டர் யோசிச்சு, கைல எடுத்த ஆயுதம்  தான்  காமெடி. காமெடினு சொன்னதும் சந்தானம் அன்  கோ ஆஜர். பர்ஸ்ட்  ஆப்ல சந்தானம், இவர் சகோதரிகள் மற்றும் கார்த்தி  இவர்கள் அடிக்கும் காமெடி கும்மி, பின் பாதியில் வரும் மனோபாலா அப்பப்ப பண்ணும் காமெடியும் தான் படத்த கரை சேக்குது.படத்தின் முதல் காட்சியை பார்க்கும் போதே தெரிந்துவிடுகிறது ,லாஜிக் கிலோ என்ன விலை என்கிறார்கள் என்று! ச‌ரி, லாஜிக்காவது, மேஜிக்காவது, படம்  சுவாரஸியமா இருக்கானு பாத்த, அதும்  மிஸ்ஸிங் தான். 

ஹீரோ கார்த்தி நடிச்சத விட நல்லா  பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். முதல்  பாதியில் இவர் சந்தானம் மற்றும் அவர் சகோதரிகளிடம் கலாட்டா செய்யும் ஜாலி ஹீரோ, இரண்டாம் பாதியில் பஞ்ச் பேசி  சண்டையிடும் ஆக்ரோஷ ஹீரோ  என இரண்டு பரிமாணங்களில் தன் பணியை செய்திருக்கிறார். அதை தவிர வேறொன்றுமில்லை.

 படத்தில் அனுஷ்கா, நிகிதா, சனுஜா என ஒரு  கூட்டமே இருந்தாலும் ஹீரோயின்  பதவி அனுஸ்காவுக்கே, முதுமை அப்பட்டமாய் தெரிகிறது. இவர்  "சிங்கத்தை" விட சிறுத்தைக்கே மேட்ச். படத்தில் இவர் வேலை ஹீரோவை லவ் பண்ணுவது, ஹீரோவுடன் டூயட் ஆடுவது.

சந்தானம் காமெடி பொறுப்பேத்திருக்கிறார் (படத்திற்கு முக்கிய பொறுப்பும் இவரே), இவர் காமெடியும் ,காமநெடியும் கலந்து செய்திருக்கிறார். குறிப்பாக  கார்த்தியிடமிருந்து வழியும் தன் தங்கைகளை காப்பற்ற போராடும் காட்சிகள் கலகலப்பு. ஆனால் ஓரளவிற்கு மேல் சலிப்பே. படத்தின் பின் பாதியில் மனோபாலா காமெடி பொறுப்பேற்று அப்பப்ப சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக மிலிந்த் சோமன், சுமன், பிரதாப் போத்தன். இவர்களும் தங்கள் பங்கிற்கு வில்லத்தனமும், காமெடியும் செய்துள்ளனர்.அதிலும் டாடா சுமோ ஊர்வலம், யூனிஃபார்ம் அடியாட்கள் என பார்த்து சலித்து போன சமாசாரங்கள் வெறுப்பூட்டுகின்றன. இசை தேவி ஸ்ரீ பிரசாத், "Bad Boy " பாடலை தவிர மற்றவை  சொல்லும்படியில்லை. இந்த படத்தை தயாரித்து  வழங்கியிருப்பவர் ஸ்டுடியோ கிரின் கே.இ.ஞானவேல் ராஜா.

மேலும் பொங்கல் வெளியீடு திரைப்படங்களின் விமர்சனங்களுக்கு.....


No comments:

Post a Comment