Banner Wishes

செய்திகள்

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - அதிரடி விமர்சனம்

DTH ஒளிபரப்பால் தியேட்டர் உரிமையாளார்கள் பிரச்சனை, முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு என சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்,
"வரும் ஆனா வாராது" என்பது போல, தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து மற்ற நாடு மற்றும் மாநிலங்களில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பிரமாண்டாக இன்று வெளியாகி உள்ளது. இந்த சர்ச்சைகளே விஸ்வரூபத்திற்கு "விஸ்வரூப" விளம்பரமாக அமைந்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சரி உலக  நாயகனின் "ரூபத்தை"  பற்றி பார்ப்போம்.

கதையானது  பாயிண்ட் டு பாயிண்ட் போல அமெரிக்காவில் துவங்கி, ஆப்கானிஸ்தான் போய், பிறகு அங்கிருந்து  மீண்டும் அமெரிக்கா வந்து, மீதி கதையை  "விஸ்வரூபம்" பகுதி 2ல் பாருங்கள் என்று சொல்லி முடிவடைகிறது. 

ஹீரோயின் பூஜா குமார் தன் மேற்ப்படிப்பிற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலாலும், விருப்பமே இல்லாமல் கமலை திருமணம் செய்து கொள்கிறார். 


ஹீரோ கமல் பெண்மை தன்மை கொண்ட பரதநாட்டிய ஆசிரியர். இவர்கள் பேருக்கு கணவன், மனைவியா வாழறாங்க மத்தபடி ஒண்ணுமில்ல. ஹீரோயின் தான் விரும்பும் நபருடன் வாழ, ஹீரோவை விவாகரத்து பண்ணலாம்னு நினைக்கின்றா. அதற்காக ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட் உதவியுடன் ஹீரோவின் பலவீனத்தை கண்டுபிடிக்க சொல்றா. அந்த முயற்சியில் ஹீரோவை  பற்றி சில அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது. 

அதாவது ஹீரோ  ஒரு முஸ்லீம், மற்றும் தலிபான் தீவிரவாத கும்பலில் ஒருவர் என்றும் தெரியவருகிறது. அது என்வென்று பார்த்தால் ஹீரோ விசாம் அக்ரம் காஷ்மிரி என்ற இந்திய உளவுதுறையை (RAW Agent) சேர்ந்தவர். சில "முக்கிய"(தமிழ் மொழி தெரிந்தவர்) காரணங்களுக்காக, தலிபான் தீவிரவாதி அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். பின் கமல் ஏன் அமெரிக்காவில் உள்ளார்? ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? என முழு ஆக்க்ஷனுடன் சொல்லியிருப்பதே இந்த விஸ்வரூபம்.

முதலில் நடிகர் கமல் : பெண் நளினம் கொண்ட நடன ஆசிரியர், தாலிபன் தீவிரவாதி மற்றும் ஆக்ரோச அதிரடி உளவாளி என அந்தந்த கதாபாத்திரமாக மாற்றியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளும்  அவர் உழைப்பு பளிச்சிடுகிறது. ஹீரோயின்களாக பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர். வில்லன் உமர் மிரட்டியிருக்கிறார். 

இயக்குனர் கமல் : மனதில் ஹாலிவுட்க்கு இணையான படமாக "விஸ்வரூபம்" இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அமெரிக்க பத்திரிகைகளில் சித்தரிக்கப்படும் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பின்ஆதங்கம்,வலி,வேதனை, கொடூர முகம் என அனைத்தையும் விளக்கமாக சொல்லியுள்ளார். ஆப்கானிஸ்தான் காட்சிகள் அருமை, முழுக்க, முழுக்க  ஆப்கானில் இருந்த உணர்வை தருகிறது. ஒரு டைரக்டராக கமல் க்ளாஸ்.

ஆனாலும் மசாலா படத்திற்கே உரிய "லாஜிக் ஓட்டை/அபத்தம் " - களுக்கும் குறைவில்லை. கமல் படத்திற்கே உண்டான "புரியாத புதிர்" களும் உண்டு.

படம் துவங்கியது முதல் முடியும் வரை, ஆக்க்ஷன் காட்சிகளால் விரைவாகவும், விறுவிறுப்பாகவும்  நகர்கிறது. மொத்தத்தில் இந்த விஸ்வரூபம் தமிழ் திரை உலகின் "ஒரு புதிய ரூபமாகவே அமைந்த்துள்ளது, மேலும் விஸ்வரூபம்" பகுதி 2 க்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.


No comments:

Post a Comment