Banner Wishes

செய்திகள்

Saturday, January 5, 2013

திம்பம் மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் சரக்கு லாரி உருண்டது

சத்தியமங்கலம், :  திம்பம் மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு ஏராளமான சரக்கு வாகனங்கள் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த மலைப்பாதையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட அளவான 16 டன் எடைக்கும் மேற்பட்ட அதிகளவில் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் பழுது ஏற்பட்டு அடிக்கடி குறுகலான சாலையில் நின்று விடும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நகர முடியாத நிலை உருவாகும்.


 நேற்று மதியம் 12 மணியவில் மைசூரிலிருந்து பல்லடத்திற்கு மக்காச்சோள லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று 2வது கொண்டை ஊசி வளைவில், லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் டிரைவரும், கிளீனரும் லேசான காயங்களுடன் கீழே குதித்து உயிர் தப்பினர். லாரியில் இருந்த மக்காச்சோளம் கீழே கொட்டி வீணானது. லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. லாரியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. அடிக்கடி இப்பகுதியில் லாரிகள் விபத்திற்குள்ளாவதால், அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாக சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

.80 வயதான பென்சனர்களுக்கு  இலவச பஸ் பாஸ் தரவேண்டும்சென்னிமலை.  பென்சனர் கூட்டமைப்பு கூட்டம்  சென்னிமலையில் நடைபெற்றது, கூட்டத்திற்கு பென்சனர் கூட்டமைப்பு வட்டாரக் கிளை தலைவர் கே.ஆர்.ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். செயலாளர் பொன்.ஆறுமுகம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் எம்.பி. பொன்னுசாமி நிதிநிலை அறிக்கை வாசித்தார். சென்னிமலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கு.தேவகிராணி, சென்னிமலை கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நா.சோமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் அப்பாவு, துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.

 தமிழக ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலப் பொருளாளர் அ.செ.கந்தசாமி 80 வயது நிரம்பிய மூத்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார். மருத்துவ படி ரூ.500 வழங்க வேண்டும், மருத்துவ நிதி 2 லட்சமாக உயர்த்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும், 80 வயது ஆனவாகளுக்கு பேருந்தில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியன் பேசினார்.

No comments:

Post a Comment