Banner Wishes

செய்திகள்

Showing posts with label உணவு முறை. Show all posts
Showing posts with label உணவு முறை. Show all posts

Sunday, June 23, 2013

உணவு முறை - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓட...

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். 

முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --1/2 கிலோ
வெந்தயம் ---1/4 கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

Monday, March 25, 2013

உணவே மருந்து - பைபாஸ் சர்ஜரி தவிர்க்க சிறந்த வழி

நண்பர்களே கவனியுங்கள்.!.!. இது உண்மைச் சம்பவம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

Sunday, February 17, 2013

கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Thursday, February 14, 2013

உணவு முறை - மாரடைப்பை தடுக்கும் திராட்சை!


இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்  ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

Sunday, February 3, 2013

உணவு முறை - சூட்டை குறைக்கும் வெந்தயம்


நம் வாழ்வில் நமக்கு பயன்படும், அறியப்படும் சின்ன..சின்ன விஷயங்கள் யாவும் அற்புதமாகவே இருக்கிறது. உதாரணமாக ஒரு பெரிய கோபுரத்தை பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம்.

 நம் ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை,  சின்னச் சின்ன செயல்களை தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை பற்றி இனி  வரும் பதிவகளில் அறிந்து கொள்ளவோம்.  இந்தப் பதிவில் வெந்தயத்தின் பலனை பற்றி பார்க்கலாம்.

Thursday, January 24, 2013

உணவு முறை - மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

இன்றைய அதிவேக கால ஓட்டத்தில்,  நாம் உண்ணும் உணவுகளிலிருந்து நம் மூளை செயல்பட தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை, இதன் காரணமாக ஞாபக சக்தி குறைவு, கவனமின்மை போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

 ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

Monday, January 21, 2013

உணவே மருந்து - சிவப்பு தக்காளி சூப்


உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.  தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.  வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.

Tuesday, January 8, 2013

உணவே மருந்து - கைக்குத்தல் அரிசியின் பயன்


அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!


எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.