"சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்" என முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து, இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) "20-20' ஓவர் கிரிக்கெட்போட்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆறாவது தொடர் வருகிற ஏப்., 3ம் தேதி துவங்கி, மே 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம், இன்று (பிப். 3) சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்திய வீரர்கள் 7 பேர் மட்டும் பங்கேற்றுள்ளனர். 101 பேர் கொண்ட பட்டியலில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிகம் உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்த ஏலத்தின் முடிவுகள்... (நேரலை கண்ணொளி இணைக்கப்பட்டுள்ளது)
ஐபிஎல் 20-20 ஓவர் கிரிக்கெட் 6-வது தொடருக்கான, கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்காக 101 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயராகி உள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களே ஆதிக்கம் பெற்று முன்னிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் 7 இந்திய வீரர்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏலம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடை பெறவுள்ளது.
முழுப்பட்டியலை பார்க்க / தரவிறக்கம் செய்ய: