Banner Wishes

செய்திகள்

Wednesday, January 2, 2013

தமிழ் இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும்...

தமிழ் தழுவாத தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கக் கூடாது என்ற அடங்காத ஆசையுடன், பயனுள்ள மென்பொருள் தொகுப்புகளைப் பலர் உருவாக்கித் தந்து வருகின்றனர். 

 அவற்றுள் ஆப்பிள் நிறுவன மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், தமிழ் பயன்படுத்த முத்து நெடுமாறன் வழங்கிய, “முரசு செல்லினம்” என்னும் மென் பொருள் குறித்தே இந்த பதிவு. 

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) மற்றும்  ஐடியூன்  ஸ்டோரிலும் (itune store) இந்த மென்பொருளை, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கர்நாடக மாநில ஏர்செல் இன்றைய சலுகை


கர்நாடக மாநில ஏர்செல் இன்றைய சலுகை

சிறந்த டாப் அப் வாய்ப்புகள்

MRP (Rs.)Talktime (Rs.)Benefits
10
7.9
20
15.8
30
23.7
50
41.50
68
68
Full Talk Time + 5 A-A mins (validity 1 Day)
75
75
Full talk time (unlmtd val) + 300 local A-A secs (5D val)
100
100
Full Talk Time



ஊர் சுற்றலாம் வாங்க - முக்கொம்பு (திருச்சி மாவட்டம்)

முக்கொம்பு இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தளம் ஆகும் .
காவிரி ஆற்றின் குறுக்கே  திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து  15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
      இது திருச்சிக்கு அருகே உள்ளது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.
இது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன்  என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.
   குழந்தைகள் , பெரியவர்கள் , இளைஞர் அனைவருக்கும் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம்.விடுமுறை நாட்களில் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல சிறந்த இடம்.
இங்கு சுற்றிபார்க்க நுழைவுகட்டணம் = ரூ.5 
 நன்றி :விக்கிபீடியா

பக்கிங்ஹாம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்  (Buckingham Canal) - சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று,

Tuesday, January 1, 2013

2012 - ம் ஆண்டிற்க்கான பயர் பாக்ஸ் உலாவி - ன் சிறந்த ஆடான் / எக்ஸ்டெண்சன்ஸ் (add-on / Extensions)

இணையத்தில் ஒவ்வொரு உலாவியும் தனக்கென்று ஆடான் / எக்ஸ்டெண்சன்ஸ் (add-on / Extensions) ஐ கொண்டிருக்கின்றன.! இந்த add-on கள்  பிரவுசர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தருகிறது. மொஸில்லா நிறுவனமானது எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அறிமுகப்படுத்தியதுடன், மற்றவர்களும், அதே போல தயாரித்து வழங்க அனுமதித்துள்ளது! கடந்த 2012 - ம் ஆண்டில் மக்களின்  வரவேற்பை பெற்ற 12  எக்ஸ்டன்ஷன் (add-on) (ஒவ்வொரு மாதமும் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்த ஒன்று ) - களை  கீழ் காண்போம்.

டிசம்பர் மாதம் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்ததாக பரிந்துரைப்பது,
collusion இது பாதுகாப்பு தரும் புரோகிராம் ஆகும். எந்த இணைய தளங்கள், நாம் இணையத்தில் உலா வரும் வழிகளைக் கண்காணிக்கின்றன என்று நமக்குத் தெரிவிக்கும் பணியினை இது மேற்கொள்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்கள், எவ்வாறு ட்ரேக்கர்களுக்கும் (trackers) நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
தரவிறக்கம்  செய்ய  : https://addons.mozilla.org/firefox/addon/collusion/?src=externaldenblog