பரதேசி - ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலைத் தோட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் வலியை தாங்கி வெளிவந்திருக்கும் இயக்குனர் பாலாவின் படைப்பு.
கதையானது 1939ம் ஆண்டு, தென்தமிழ்நாட்டில் இருக்கும் சாலூர் எனும் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. அக்கிராமத்தில் தண்டோரா போட்டு சேதி சொல்லி பிழைப்பு நடத்தும் ஒட்டு பொறுக்கி (எ) ராசா (அதர்வா), தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் அவ்ஊரிலே வசிக்கும் அங்கம்மாவுக்கும் (வேதிகா) சற்று எல்லை மீறிய காதல். இதன் விளைவாக அங்கம்மா கர்ப்பமடைகிறாள். தன் காதலியை கைப்பிடிக்க, நல்ல பிழைப்பைத் தேடி, பயணப்படுகிறார் ராசா.........