Banner Wishes

செய்திகள்

Thursday, January 31, 2013

ஐபிஎல் 6-வது தொடருக்கான வீரர்கள் ஏலப் பட்டியல்

ஐபிஎல் 20-20 ஓவர் கிரிக்கெட் 6-வது தொடருக்கான,  கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்காக  101 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயராகி உள்ளது.  இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களே ஆதிக்கம் பெற்று முன்னிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் 7 இந்திய வீரர்கள் மட்டுமே  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏலம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடை பெறவுள்ளது. 

முழுப்பட்டியலை  பார்க்க / தரவிறக்கம் செய்ய: 

சிறை கம்பிகளுக்கு பின்னால் ஒரு சாதனை!

குற்றம் புரிந்தவர்கள், தன் குற்றத்தை உணர்ந்து, மனம் திருந்தி நல்ல  மனிதர்களாக மாற்றுவதற்கான இடமே சிறை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சிறைகள் ஒரு மனிதனை அப்படி தான்   மாற்றுகிறதா? என்றால் ஆம்! இல்லை! என இரு விவாத பதிலே கிடைக்கும்.

ஆனால், குற்றவாளியான ஒருவர் தனது சிறைவாச  காலத்தில் சாதனை மனிதராகியுள்ளார். யார் அவர் ? எப்படி?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு படேல்(57) . மருத்துவரான பானு படேல், கடந்த 2004-ம் ஆண்டு  அன்னியச் செலாவணி  (Foreign Exchange Regulation Act ) வழக்கில் கைதாகி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் 2005 முதல் 2011 வரை சிறையில் இருந்தார். இந்த 6 வருட கால சிறை வாசத்தில்  திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்வியைத்  தொடர்ந்தவர், எம்.எஸ்சி (M.Sc.,) எம்.காம் (M.Com), பி.காம் (B.Com), முதுகலைப் பட்டயப் படிப்புகள் (PG Diploma) என 31  பட்டங்களை வாங்கி குவித்தார். 

Friday, January 25, 2013

இந்திய குடியரசின் தோற்றமும் அதன் வரலாறும்


பதிவுலக நண்பர்களுக்கு "நண்பர்கள் உலகத்தின்" சார்பாக "இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்".

இந்தியக் குடியரசு தினம் இந்திய ஆட்சியமைபுக்கான ஆவணமாக இந்திய ஆரசியல்லமைப்பு 1935 இன் மாற்றாகஇந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள்.
இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறைநாட்களில் இதுவும் ஒன்று.நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர் மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் விழா தொடங்கும்.

விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார்சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

விஸ்வரூபம் - அதிரடி விமர்சனம்

DTH ஒளிபரப்பால் தியேட்டர் உரிமையாளார்கள் பிரச்சனை, முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு என சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்,
"வரும் ஆனா வாராது" என்பது போல, தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து மற்ற நாடு மற்றும் மாநிலங்களில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பிரமாண்டாக இன்று வெளியாகி உள்ளது. இந்த சர்ச்சைகளே விஸ்வரூபத்திற்கு "விஸ்வரூப" விளம்பரமாக அமைந்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சரி உலக  நாயகனின் "ரூபத்தை"  பற்றி பார்ப்போம்.

கதையானது  பாயிண்ட் டு பாயிண்ட் போல அமெரிக்காவில் துவங்கி, ஆப்கானிஸ்தான் போய், பிறகு அங்கிருந்து  மீண்டும் அமெரிக்கா வந்து, மீதி கதையை  "விஸ்வரூபம்" பகுதி 2ல் பாருங்கள் என்று சொல்லி முடிவடைகிறது. 

ஹீரோயின் பூஜா குமார் தன் மேற்ப்படிப்பிற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலாலும், விருப்பமே இல்லாமல் கமலை திருமணம் செய்து கொள்கிறார். 


Thursday, January 24, 2013

வாலு திரைப்படத்தின் - ஒரு பாடல் தரவிறக்கம் செய்ய

சிம்பு, ஹன்சிகா  நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் "வாலு" திரைப்படத்தின்  லவ்னுங்கறவன் நீ யாருடா... என்ற ஒரு பாடலின் "Promo" இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அதனை தரவிறக்கம் செய்ய.....