Banner Wishes

செய்திகள்

Thursday, January 31, 2013

ஐபிஎல் 6-வது தொடருக்கான வீரர்கள் ஏலப் பட்டியல்

ஐபிஎல் 20-20 ஓவர் கிரிக்கெட் 6-வது தொடருக்கான,  கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்காக  101 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயராகி உள்ளது.  இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களே ஆதிக்கம் பெற்று முன்னிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் 7 இந்திய வீரர்கள் மட்டுமே  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏலம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடை பெறவுள்ளது. 

முழுப்பட்டியலை  பார்க்க / தரவிறக்கம் செய்ய: 

சிறை கம்பிகளுக்கு பின்னால் ஒரு சாதனை!

குற்றம் புரிந்தவர்கள், தன் குற்றத்தை உணர்ந்து, மனம் திருந்தி நல்ல  மனிதர்களாக மாற்றுவதற்கான இடமே சிறை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சிறைகள் ஒரு மனிதனை அப்படி தான்   மாற்றுகிறதா? என்றால் ஆம்! இல்லை! என இரு விவாத பதிலே கிடைக்கும்.

ஆனால், குற்றவாளியான ஒருவர் தனது சிறைவாச  காலத்தில் சாதனை மனிதராகியுள்ளார். யார் அவர் ? எப்படி?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு படேல்(57) . மருத்துவரான பானு படேல், கடந்த 2004-ம் ஆண்டு  அன்னியச் செலாவணி  (Foreign Exchange Regulation Act ) வழக்கில் கைதாகி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் 2005 முதல் 2011 வரை சிறையில் இருந்தார். இந்த 6 வருட கால சிறை வாசத்தில்  திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்வியைத்  தொடர்ந்தவர், எம்.எஸ்சி (M.Sc.,) எம்.காம் (M.Com), பி.காம் (B.Com), முதுகலைப் பட்டயப் படிப்புகள் (PG Diploma) என 31  பட்டங்களை வாங்கி குவித்தார். 

Friday, January 25, 2013

இந்திய குடியரசின் தோற்றமும் அதன் வரலாறும்


பதிவுலக நண்பர்களுக்கு "நண்பர்கள் உலகத்தின்" சார்பாக "இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்".

இந்தியக் குடியரசு தினம் இந்திய ஆட்சியமைபுக்கான ஆவணமாக இந்திய ஆரசியல்லமைப்பு 1935 இன் மாற்றாகஇந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாள்.
இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறைநாட்களில் இதுவும் ஒன்று.நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர் மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் விழா தொடங்கும்.

விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும்மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார்சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

விஸ்வரூபம் - அதிரடி விமர்சனம்

DTH ஒளிபரப்பால் தியேட்டர் உரிமையாளார்கள் பிரச்சனை, முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு என சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்,
"வரும் ஆனா வாராது" என்பது போல, தமிழகம், பாண்டிச்சேரி தவிர்த்து மற்ற நாடு மற்றும் மாநிலங்களில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பிரமாண்டாக இன்று வெளியாகி உள்ளது. இந்த சர்ச்சைகளே விஸ்வரூபத்திற்கு "விஸ்வரூப" விளம்பரமாக அமைந்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சரி உலக  நாயகனின் "ரூபத்தை"  பற்றி பார்ப்போம்.

கதையானது  பாயிண்ட் டு பாயிண்ட் போல அமெரிக்காவில் துவங்கி, ஆப்கானிஸ்தான் போய், பிறகு அங்கிருந்து  மீண்டும் அமெரிக்கா வந்து, மீதி கதையை  "விஸ்வரூபம்" பகுதி 2ல் பாருங்கள் என்று சொல்லி முடிவடைகிறது. 

ஹீரோயின் பூஜா குமார் தன் மேற்ப்படிப்பிற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலாலும், விருப்பமே இல்லாமல் கமலை திருமணம் செய்து கொள்கிறார். 


Thursday, January 24, 2013

வாலு திரைப்படத்தின் - ஒரு பாடல் தரவிறக்கம் செய்ய

சிம்பு, ஹன்சிகா  நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் "வாலு" திரைப்படத்தின்  லவ்னுங்கறவன் நீ யாருடா... என்ற ஒரு பாடலின் "Promo" இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அதனை தரவிறக்கம் செய்ய.....

உணவு முறை - மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

இன்றைய அதிவேக கால ஓட்டத்தில்,  நாம் உண்ணும் உணவுகளிலிருந்து நம் மூளை செயல்பட தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை, இதன் காரணமாக ஞாபக சக்தி குறைவு, கவனமின்மை போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

 ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

Wednesday, January 23, 2013

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 2


முந்தைய பதிவில் குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பதிந்திருந்தோம்.அதன் தொடர்ச்சி....

என்னவன்முறையாகுடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களாபெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

சரிநான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன்இது வன்முறையாஇல்லையா என்று பாருங்கள்.பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர்திண்டுக்கல்தேனிதர்மபுரிகிருஷ்ணகிரிஊட்டிதிருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறதுபுள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லைஇது ஒரு வன்முறையில்லையா?

சார்ட்டர்டு அக்கௌன்டன்ட் (C.A) இறுதி தேர்வில் தமிழ் மாணவி முதலிடமெடுத்து சாதனை


மும்பையில் வாழும்  தமிழ் மாணவி பிரேமா ஜெயகுமார் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை (விழுப்புரம் மாவட்டம்) சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள் பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் (மலாட் பகுதியில்) வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.


Tuesday, January 22, 2013

இன்று - ஜன.23: சரித்திர நாயகன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள்


ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லைஅவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி என அழைக்கப்படும் "நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்ஆவார்.

யார் இந்த நேதாஜி...?


குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி - பகுதி 1


குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள்அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாதுகுழந்தைகள் உலகம் மிக விந்தையானதுவேடிக்கையானதுவிநோதமானதுஎவராலும் எளிதாக நுழைய முடியாதுஅதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும்அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்லஅவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்லஅவர்கள் இயற்கையின் வெளிப்பாடுஉங்கள் எதிர்பார்ப்புகளைவிருப்பங்களைஎண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள்
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்ஏனென்றால் "ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை." என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல.


Monday, January 21, 2013

உணவே மருந்து - சிவப்பு தக்காளி சூப்


உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.  தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.  வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.

வழக்கு எண் 18/9 - சிறந்த திரைப்பட விருது

பாரீஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது.

தெற்காசிய திரைப்பட விழாவில், தெற்காசியாவில் தயாரான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவின் நிறைவு நாளில் சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்து விருது வழங்கினர் .அந்த விருதை ‘வழக்கு எண் 18/9‘ திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல்வேறு பட விழாக்களில் இப்படம் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


டிரிங்..டிரிங் : 181 - பெண்களுக்கான ஹெல்ப்லைன்

தலைநகர் டில்லியில் மருத்துவ மாணவியின்  பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கி உள்ளனர். அதேவேளையில்,நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு பல்வேறு காரணிகளை செய்து வருகிறது. அவற்றுள்  மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உதவ, ஹெல்ப்லைன் எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆபத்தான காலங்களில் "181" என்ற எண்ணை பெண்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல்  இச்செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபல் அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுத உள்ளார். 

Sunday, January 20, 2013

மில்கிவே : 15 வயது மாணவன் வடிவமைத்த "விளையாட்டு பயன்பாடு"




மில்கிவே : ஆண்ட்ராய்ட்  மொபைலுக்கான ஒரு "விளையாட்டு பயன்பாடு" (Game App).  இதன் சிறப்பம்சம் என்னவென்றால்இதனை வடிவமைத்த வல்லுநர் தான்ஆம் தலைநகர் டெல்லியை சேர்ந்த, 15 வயதே நிரம்பியஹாசன் கமல் (Hasan Kamal) என்ற மாணவன் தான் இந்தபயன்பாட்டை வடிவமைத்தவர்.

Wednesday, January 16, 2013

புத்தகம் - கலக்கல் விமர்சனம்


 கோடிக்கணக்கான பணம் புதைக்கப்பட்ட ஒரு  இடத்தின் குறிப்பு ஹீரோ சத்யாவுக்கு ஒரு புத்தகத்தின் மூலமாக கிடைக்கிறது. சத்யாவ தன் நண்பர்கள் உதவியுடன் அந்த பணத்தை எடுத்துக்கொள்கிறார். ஆனால் பணம்  அமைச்சர் சுரேஷ்க்கு உரிமையானது, அவர் தன் பணத்தை அடைய சத்யாவை தேடுகிறார். இதற்கு ஜெகதிபாபு உதவுகிறார். ஹீரோ தப்பித்தாரா? அமைச்சர் பணத்தை  கைபற்றினாரா? என்ற ஹீரோ & வில்லன் சடுகுடு ஆட்டமே இந்த "புத்தகம்".!

"ஆட்டோகிராப்" - மாட்டு பொங்கல்

"டிவி' முன் பொழுதை கழித்து, பண்டிகைகளை பகல் கனவாய் கழித்து வரும், இந்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை கூட, நினைவூட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு வகையில் வேதனையான விஷயம் என்றாலும், நிகழ்வுகளை முன்வைக்கும் போது, இதைப் படித்தாவது, பாரம்பரியத்தை அறிந்து கொண்டால், சந்தோஷம் தானே! 

கிராமங்களிலும் நுழைந்த "டிவி', நம் கலாசாரத்தை கரையானாய் கரைத்ததன் விளைவு, மாட்டு பொங்கல் பண்டிக்கைக்கும் "ஆட்டோகிராப்' பட்டம் சூட்ட வேண்டிய கட்டாயம். 

Monday, January 14, 2013

சமர் - திரிலிங் விமர்சனம்


இடியாப்ப சிக்கல் போல பல பல ட்விஸ்ட்கள் கொடுத்து ஒரு திர்லர் படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் 'திரு'. 
கதைஊட்டியில் விஷாலும், சுனைனாவும் லவ்ராங்க. ஆனா விஷால் லவ்வ பார்ட் டைமாகவும், மற்ற வேலைகளை முழு நேரமாகவும் செய்றார்

Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - இனிப்பான வமர்சனம்


நம்ம "முருங்கைக்காய்" ஸ்பெஷலிஸ்ட் பாக்யராஜின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி  சூப்பர் டூப்பர் ஹிட்டான "இன்று போய்  நாளை வா" திரைப்படத்தில்  சில..பல.. (ஒரிஜினலில் இருந்த ஹிந்தி டீச்சர் இங்க பாட்டு வாத்தியார், உடற்பயிற்சி மாஸ்டர் இங்க டான்ஸ் மாஸ்டர் எனபட்டி டிங்கரிங் பாத்து வெளிவந்திருப்பது  தான்  இந்த '..தி.'. என்னதான் நமக்கு நன்கு பரிச்சியப்பட்ட கதைனாலும், காமெடி காமெடி  காமெடி என்ற நெய் ஊற்றி இனிப்பான லட்டாக பரிமாறிஇருக்கிறார்கள். 

Saturday, January 12, 2013

சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து சாதனை!


சென்னை ஐ.ஐ.டி சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்து  சாதனை படைத்து உள்ளனர். 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன்  செயற்கை ரத்தம் தயாரிப்பு  குறித்த ஆய்வுகளை சென்னை ஐ..ஐ.டி.க்கு செய்து வந்தது. இதற்கென ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது.  அக்குழுவிற்கு டாக்டர்  சோமா குஹ்தாகுர்தா (Dr.Soma Guhathakurta) தலைமை வகித்தார். டாக்டர் சோமா மற்றும் அவர் குழுவினரின் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக,  ஸ்டெம் செல்களில் இருந்து ரத்தச் சிவப்பு அணுக்களைப் பிரித்து  எடுத்து அதன் மூலமாக செயற்கை முறையில் ரத்தம் தயாரித்தனர்.

சமர் திரைப்படத்தின் முழு HD வீடியோ பாடல்கள்

விஷால்,திரிஷா மற்றும் சுனைனா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரும் "சமர்" திரைப்படத்தின் இரண்டு  HD வீடியோ பாடல்கள் "youtube" இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 கண்ணா லட்டு தின்ன ஆசையா - இனிப்பான வமர்சனம்                          



Friday, January 11, 2013

கடல், கேடி பில்லா-கில்லாடி ரங்கா - புதிய டிரைலர்

'கடல்' மற்றும் 'கேடி பில்லா-கில்லாடி ரங்கா' திரைப்படங்களின் பிரத்தேக "Official" டிரைலர்.







அலெக்ஸ் பாண்டியன் - தரை டிக்கெட் விமர்சனம் @ டைம் பாஸ் ஆன்லைன்



டைம் பாஸ் விகடனில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் விமர்சனம்: முகப்புத்தகத்திலிருந்து....
சந்தானத்தை கவுண்டமணியோட க்ளோனிங்குன்னு சொல்லுவாய்ங்கள்ல... ஆனா இனி வெண்ணிற ஆடை மூர்த்தியோட க்ளோனிங்குன்னு சொல்லுவீங்க. அம்புட்டு டபுள் மீனிங்.
                                     

வலைத்தளத்தில் திருக்குறள் ஒளிர ஒரு விட்ஜெட்!



வணக்கம் பதிவுல நண்பர்களே,

உங்கள் வலைத்தளத்தில் "திருக்குறள்" ஒவ்வொன்றாக அதன் பொருளுரையுடன் ஒளிர செய்ய  மிக அருமையான ஜாவா ஸ்கிரிப்ட் விட்ஜெட் (JAVSCRIPT WIDGET) கிழே கொடுக்கப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்கள் வலைதளத்தை மேலும் அழகாக்குங்கள். 

விட்ஜெட் ஸ்கிரிப்ட்  : 
" <iframe src="http://justtrythis.co.in/demos/thirukkural/index.php" 
style="width: 100%; height: 120px; border: mediam none;"></iframe> "