Banner Wishes

செய்திகள்

Wednesday, January 2, 2013

தமிழ் இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும்...

தமிழ் தழுவாத தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கக் கூடாது என்ற அடங்காத ஆசையுடன், பயனுள்ள மென்பொருள் தொகுப்புகளைப் பலர் உருவாக்கித் தந்து வருகின்றனர். 

 அவற்றுள் ஆப்பிள் நிறுவன மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், தமிழ் பயன்படுத்த முத்து நெடுமாறன் வழங்கிய, “முரசு செல்லினம்” என்னும் மென் பொருள் குறித்தே இந்த பதிவு. 

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) மற்றும்  ஐடியூன்  ஸ்டோரிலும் (itune store) இந்த மென்பொருளை, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இதனை ஆண்ட்ராட்ய் சிஸ்டம் இயங்கும் சாதனங்கள் வைத்திருப்போர் அனைவரும், தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட்  பயனாளர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து முழுமையாகப் பயன்படுத்த தங்கள் சாதனங்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.1 (ஜெல்லி பீன்) இருக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் இயங்கும் எச்.டி.சி. மற்றும் சாம்சங் சாதனங்களில், முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்புகளிலும் தமிழை உள்ளீடு செய்திட முடியும் என்பதால், அவற்றிலும் செல்லினத்தைப் பயன்படுத்தலாம். 


இதனைப் பயன்படுத்துகையில், சொற்களை அமைக்கும் போது, விண்டோவில், அந்த எழுத்துக்கள் தொடங்கும், அதிகம் பயன்படுத்தப்படும் சொற்கள் சில காட்டப்படும். நாம் அமைக்க இருக்கும் சொல் இருப்பின், அதனைக் கிளிக் செய்து உடனடியாக அமைக்கலாம். இதில் சொல் ஒலி அடிப்படையில் இயங்கும், போனடிக் எனப்படும் அஞ்சல் கீ போர்டு அமைப்பு முறையும், தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு முறையும் தரப்பட்டுள்ளது. 

தமிழில் மின்னஞ்சல் அமைப்பது, குறுஞ்செய்திகளை உருவாக்குவது, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான செய்திகளை அமைப்பது ஆகிய பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம். தமிழுடன் ஆங்கில மொழியிலும் இதனை மேற்கொள்ளலாம். எனவே செல்லினம் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் செய்தி உரை அமைக்க, இதனை விட்டு வெளியேறத் தேவையில்லை.

இதனைத்  கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Storeதரவிறக்கம் செய்திட : https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

இதனைத்  ஐடியூன்  ஸ்டோரில் (itune store) தரவிறக்கம் செய்திட :
https://itunes.apple.com/in/app/sellinam/id337936766?mt=8
என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு, பயன்படுத்தும் சாதனம் வழியாகச் செல்லவும். 

மேலும் விரிவான தகவலுக்கு :  செல்லினம் ஆண்ட்ராய்ட்  |  செல்லினம் ஆப்பிள்
நன்றி  - தினமலர்

3 comments:

  1. Any Updates on Windows Phone users..

    ReplyDelete
    Replies
    1. Hi Sridharan,
      thanks for the compliments. Currently Sellinam is not available on Windows Platform. We ll expect that soon.

      Delete
  2. தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி நண்பா..!

    ReplyDelete